வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்சப், சமீபத்தில் அதன் புதியஅம்சமான கம்யூனிட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒரே சமூகத்தை சேர்ந்த பல குழுக்களை ஒன்றிணைக்க உருவாக்க பட்டது தான் இந்த கம்யூனிட்டி. உதாரணமாக அலுவலகம் சார்ந்த தனித்தனி குரூப்கள், கல்லூரி சார்ந்த தனி குரூப்கள், அபார்ட்மெண்ட் முகவர்கள் இவற்றையெல்லாம் ஒரே குடையின் கொண்டுவருவது போன்றதொரு அமைப்பு. இதன்மூலம் பயனர்கள் 20 வாட்சப் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு சமூகத்தை உருவாக்க அனுமதிக்கிறது. இது ஒரு ஒளிபரப்பு சேவை. முக்கிய அறிவிப்புகளைப் பகிரவும், தினசரி நிகழ்வுகளை பற்றி கூறவும் உதவுகிறது. இந்த கம்யூனிட்டில் பொது அறிவிப்புகள், தினசரி வாக்கெடுப்புகள் போன்ற வசதிகளும் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. ஸ்லாக், டிஸ்கார்ட் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்
கம்யூனிட்டி வசதி ஏப்ரல் மாதத்தில் மெட்டா நிறுவனத்தால் முதன்முதலில் சோதிக்கப்பட்டது. இந்த கம்யூனிட்டி சேவை-இல் வீடியோ கால், ஆடியோ கால் வசதி இல்லை. உறுப்பினர்கள் தங்கள் வாட்சப் குரூப்-இல் வீடியோ கால் சேவையை தொடரலாம். இதே போல், வாட்சப் வீடியோ கால் வசதியையும் மேம்படுத்தி உள்ளது மெட்டா நிறுவனம். இதன் மூலம் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ அழைப்புகளில் பங்கேற்கலாம். மேலும் வாட்சப் குழு அளவை 512 இலிருந்து 1024 நபர்களாக உயர்த்தியுள்ளது. இதனால் கம்யூனிட்டி சேவையின் குழு அளவு 21500 வரை அனுமதிக்கிறது.