டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
அன்றாட பண பரிமாற்றத்திற்கு, இந்தியாவில் பலரும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்துகிறார்கள். இந்த UPI மூலம், டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற பணபரிமாற்றத்தின் மதிப்பு, அதிகபட்சமாக ரூ.12.82 லட்சம் கோடியைத் தொட்டது என ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை உபாயம், டிசம்பர் மாதத்தில், 782 கோடி பரிவர்த்தனைகள் கண்டது எனவும் தெரிவித்துள்ளது. ''நாடு முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சியை ஏற்படுத்துவதில், UPI பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. டிசம்பர் 2022 இல், யுபிஐ ஆனது Rs.12.82 டிரில்லியன் மதிப்புள்ள 7.82 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது,'' என நிதிச் சேவைத் துறை, ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
யுபிஐ பேமெண்ட்
யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம்
மேலும் சென்ற ஆண்டு, அக்டோபரில் UPI மூலம் செலுத்தப்பட்ட பணம், ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நவம்பரில், யுபிஐ மூலம் ரூ.11.90 லட்சம் கோடி மதிப்பிலான 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. UPI என்பது உடனடி நிகழ்நேர கட்டணமில்லா, வங்கிகளுக்கு இடையேயான, பியர்-டு-பியர் (P2P) ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. மேலும் இது தனி நபரின் மொபைலின் மூலமே செய்து விடும் அளவிற்கு எளிதானது. இதனால் அநேக மக்களால் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. தற்போது வரை, நாடெங்கிலும் 381 வங்கிகள் அதைச் செயல்படுத்துகின்றன. கடந்த ஆண்டில் மட்டுமே, UPI பாரிவர்தனைகளின் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ளதாக, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.