கிரெடிட் கார்டு தொகையை EMI மாற்றினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
இன்றைய உலகில் பண நெருக்கடிக்கு கிரெடிட் கார்டு வழியாக எளிதாக பணம் பெறும் வசதி உள்ளது.
கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இது பல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது.
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை க்ளியர் செய்ய பெரும்பாலும் 30 நாட்கள் இருப்பது பலருக்கும் வசதியாக இருக்கிறது.
ஆனால், நிலுவை தொகை செலுத்தாமல் போனால் மற்றும் தாமதாக கட்டணம் செலுத்தினால் மற்றும் வட்டியை அதிகரித்து பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
எனவே, கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் ஆண்டும் 36%-க்கும் அதிகமாக இருப்பதால், நிலுவை பணத்தை ஒரே நேரத்தில் செலுத்த நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
பல கிரெடிட் கார்டுகளில் 5000 மேல் வாங்கும் பொருட்களுக்கு EMI மாற்றிக்கொள்ளும் விருப்பம் உள்ளன.
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு EMI மாற்றுவதால் உண்டாகும் சிக்கல்கள் என்ன?
அதே போல, நிலுவையில் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதனை EMI-களாக மாற்றுவது நிதி சுமையை குறைக்கிறது.
அப்படி இஎம்ஐ-யைத் தேர்ந்தெடுக்கும் முன் அதில் உள்ள அபாயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
பல வணிகர்கள் No cost EMI-களை வழங்குகிறார்கள். இந்த no cost எந்த வட்டியையும் வசூலிக்காதவை .
EMI கட்டணத்தை தேர்ந்தெடுக்கும் முன் அதற்கான நிபந்தனைகள் மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும் சரிபார்க்கவும்.
கிரெடிட் கார்டு பயன்பாடு உங்கள் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதிகமாக பயன்படுத்தினால் இவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
எனவே, ஈஎம்ஐ ஆக மாற்றும் முன்பு, கிரெடிட் கார்டு வரம்பில் 30% வரை மட்டுமே பயன்படுத்தினால் ஸ்கோர் பாதிப்படையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.