Loading...
நிஜமாகும் 'எந்திரன்' கதை! ஹியூமனாய்டு ரோபோக்களை போர் களத்திற்கு கொண்டு செல்ல சீனா தீவிர முயற்சி
ரோபோக்களை போர் வீரார்களாக களமிறக்குவதற்கான தீவிர ஆராய்ச்சியில் சீனா

நிஜமாகும் 'எந்திரன்' கதை! ஹியூமனாய்டு ரோபோக்களை போர் களத்திற்கு கொண்டு செல்ல சீனா தீவிர முயற்சி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2026
02:06 pm

செய்தி முன்னோட்டம்

சீனா தனது ராணுவப் படைகளான 'மக்கள் விடுதலை இராணுவத்தில்'(PLA) மனித வடிவிலான 'ஹியூமனாய்டு' ரோபோக்களை போர் வீரார்களாக களமிறக்குவதற்கான தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. வணிக ரீதியிலான ரோபோக்கள் உற்பத்தியில் 95 சதவீத உலகளாவிய பங்கினை கொண்டுள்ள சீனா, தற்போது அந்த தொழில்நுட்பத்தை ராணுவப் பயன்பாட்டிற்கு மாற்றும் நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. சீன ராணுவப் பல்கலைக்கழகத்தின்(NUDT) ஆய்வுக் கட்டுரைகளின்படி, நகர்ப்புறப் போர்களில் மனித வீரர்களுக்குப் பதிலாக இந்த ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரிகள் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களுக்குள் நுழையும் 6 'போர் ரோபோக்கள்' அடங்கிய குழு, ஒவ்வொரு தளமாகச் சென்று எதிரிகளை அழிக்கும் வகையில் வடிவமைப்பு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்லை ஊடுருவல், உளவு பார்த்தல் மற்றும் ஆளில்லா காவல்பணி போன்ற பணிகளுக்கும் இவை பயன்படுத்தப்பட உள்ளன.

போட்டி

முன்னணியில் சீனா மற்றும் அமெரிக்காவின் போட்டி

அமெரிக்கா தனது ராணுவத்தில் ரோபோடிக் தொழில்நுட்பத்தை சேர்க்க முயன்றாலும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ரோபோ உற்பத்தியில் சீனா அமெரிக்காவை விட முன்னேறியுள்ளது.

சீன பாதுகாப்பு நிறுவனமான 'நோரின் கோ', 'ஃபுக்சி' என்ற முழு அளவிலான ஹியூமனாய்டு ரோபோவை உருவாக்கி, அதைத் தொலைதூரத்திலிருந்து மனிதர்கள் இயக்கும் அமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரோபோக்களின் பேட்டரி திறன், கரடுமுரடான போர்க்கள சூழலை எதிர்கொள்ளும் திறன் மற்றும் போர் விதிகளின்படி மனிதர்களையும் போரிடுபவர்களையும் பிரித்தறியும் திறன் ஆகியவற்றில் இன்னும் சில தொழில்நுட்ப சவால்கள் நிலவுகின்றன.

இருப்பினும், "மனித உயிர்களைப் பலி கொடுப்பதற்குப் பதிலாக ரோபோக்களை இழப்பது மேலானது" என்ற அடிப்படையில் அடுத்த 5- 10 ஆண்டுகளில் இவை முழுமையான போர்க்கள பயன்பாட்டிற்கு வரும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT