தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 1
2023 ஆம் ஆண்டிற்கான, தொழில்நுட்ப கணிப்புகளை, 'நத்திங்'-இன், இணை நிறுவனர் கார்ல் பெய் பகிர்ந்துள்ளார். தொழில்நுட்ப சமூகத்திற்கு இந்த ஆண்டு ஒரு பெரிய ஆண்டாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இவர், ட்விட்டரில் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் மெட்டாவர்ஸ், எலன் மஸ்கின் டெஸ்லா மற்றும் ட்விட்டர் மற்றும் மற்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தில், பல்வேறு அரசாங்கங்களின் பங்கு பற்றி தெரிவித்துள்ளார்.
கார்ல் பெய் கணிப்புகள்
கார்ல் பெய் கணிப்புகள்
பெய்யின் முதல் கணிப்பின்படி, சந்தையில் கணிசமான தாக்கத்தை உருவாக்க கூடிய, ஸ்மார்ட்போன்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைப் பார்க்கலாம். இதுவரை உலகம் பார்த்திடாத அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியை, அவர் 'AI கில்லர் ஆப்' எனக்குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு, டெஸ்லா ஒரு பிரத்யேக கார் பிராண்டாக இருக்காது. ஏனெனில் போட்டியாக, இந்த எலக்ட்ரானிக் வாகனத் துறையில், மற்ற கம்பெனிகளும் வேகமாக வளர்ந்து வருகிறது. எலன் மஸ்கின் புதிய கவனமாக ட்விட்டர் இருப்பதால், அந்நிறுவனம், அதீத வளர்ச்சி காணலாம். மஸ்க் அதன் வளர்ச்சிக்கு தீவிரமாக செயல்பட்டு வருவதால், 2023 ஆம் ஆண்டில் ட்விட்டர் புதிய உயரங்களைக் காணும் என்றும் அவர் கணித்துள்ளார்.