தொழில்நுட்ப உலகம் 2023: என்னென்ன திருப்பங்கள் ஏற்படும், பகுதி 2
2023 ஆம் ஆண்டிற்கான, தொழில்நுட்ப கணிப்புகளை, 'நத்திங்'-இன், இணை நிறுவனர் கார்ல் பெய் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் மெட்டாவர்ஸ், எலன் மஸ்கின் டெஸ்லா மற்றும் ட்விட்டர் மற்றும் மற்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தில், பல்வேறு அரசாங்கங்களின் பங்கு பற்றி தெரிவித்துள்ளார். மெட்டாவர்ஸ் பொதுமக்களிடமிருந்து அதிகப்படியான வரவேற்பை பெற சிறிது காலம் எடுக்கும் என்று குறிப்பிடுகிறார். இருப்பினும், மெட்டாவின் தலைவரான, மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக ஏதேனும் யுக்தியை கையாளுவர் என்று தான் கருதுவதாக, பெய் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்திற்கும், தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் 'மிக உயர்தர வணிகத்துடன்' தொடர்ந்து முன்னேறும் எனக்குறிப்பிட்டுளார்.
கார்ல் பெய் கணிப்புகள்
கார்ல் பெய் கணிப்புகள்
எனினும், ஆப்பிள் நிறுவனம், அதன் நுகர்வோருக்கு எதிரான நடத்தைகளுக்கு, உலக நாடுகளில் உள்ள அரசாங்கத்தால், கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் பெய் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நடவடிக்கையின் காரணமாகவே, வரவிருக்கும் ஐபோன்களில், மின்னல் வேக சார்ஜ்ர்களுக்கு பதிலாக, Type-C போர்ட்களுக்கு மாறவிருக்கிறது. கார்ல் பெய் தனது கடைசிக் கணிப்பில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை மாடல்களை குறிப்பிடுகிறார். அதில், வரும் ஆண்டு, அநேக நிறுவனங்கள், ஹைப்ரிட் வேலை மாதிரியைக் கைவிடும் என்று கூறுகிறார். நிறுவனங்கள், தங்களின் தேவைக்கேற்ப, முழுநேர ரிமோட் (WFH) அல்லது முழுநேர ஆன்-சைட் அமைப்பை தேர்வு செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.