பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும்
பிஎஸ்என்எல்-ன் 4ஜி தொழில்நுட்பம் 5ஜிக்கு தரம் உயர்த்தப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். "டெலிகாம் தொழில்நுட்ப 4ஜி அடுக்கு வெளிவரப் போகிறது. இது ஐந்து முதல் ஏழு மாதங்களில் 5ஜிக்கு நாட்டில் உள்ள 1.35 லட்சம் தொலைத்தொடர்பு தவர்களில் விரிவுபடுத்தப்படும்" என்று வைஷ்ணவ் கூறினார். மேலும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு ரூ.4,000 கோடியாக உயர்த்தபோவதாக கூறினார். பிஎஸ்என்எல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திடம் 5ஜி சோதனைக்கான உபகரணங்களை பெறப்போவதாகவும், அதன் உதவியுடன் 5ஜி சேவைகளுக்கான சோதனைகளைத் தொடங்கும் என்று வைஷ்ணவ் கூறினார்.
தொழில்நுட்ப புதுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள்
வன்முறைகளுக்கு எதிரான கூகிளின் முயற்சிகள் இதற்கு முன்பு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும் நடந்துள்ளது. இம்முயற்சி மூலம் மக்கள் மேலும் 5 சதவிகிதம் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல் படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. இதன் மூலம் எடுக்கப்படும் இறுதி முடிவுகள் அடுத்த வருடம் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது. ஏற்கனவே இந்தியா அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு இணங்க கூகிளின் வாட்ஸாப் செயலியில் தகவல்கள் பார்வேர்ட் செய்யும் வசதியை வரையறுத்துள்ளது.