LOADING...
என்னைக்குமே நான்தான்டா கிங்! Swiggy-யில் 10-வது ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி! 
அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடம்

என்னைக்குமே நான்தான்டா கிங்! Swiggy-யில் 10-வது ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி! 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 23, 2025
07:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியர்களின் நாவில் எப்போதும் பிரியாணி தான் ராஜாவாகத் திகழ்கிறது என்பதை 2025-ஆம் ஆண்டிற்கான ஸ்விக்கி அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உணவு விநியோக தளமான ஸ்விக்கியில், இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு சுவிக்கி மூலம் மட்டும் சுமார் 9.3 கோடி பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என அந்த நிறுவனத்தின் Year ender அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 3.25 வினாடிக்கும் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 194 பிரியாணிகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் 5.7 கோடி ஆர்டர்களுடன் சிக்கன் பிரியாணி அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளது.

விவரங்கள்

பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது எது?

பிரியாணிக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் அதிகம் விரும்பிய உணவுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது பர்கர். சர்வதேச உணவான பர்கர் இந்த ஆண்டு 4.42 கோடி ஆர்டர்களை பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. மூன்றாம் இடத்தில் 4.01 கோடி ஆர்டர்கள் உடன் பீட்சா இருக்கிறது. தென்னிந்தியாவின் விருப்பமான வெஜ் தோசை 2.62 கோடி ஆர்டர்களுடன், நான்காம் இடத்தில் உள்ளது.

மெகா ஆர்டர்

பெங்களூரு வாடிக்கையாளரின் மெகா ஆர்டர்

இந்த ஆண்டு அறிக்கையில் மிகவும் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், ஒரே ஒரு உணவகத்தில் ஒரே ஆர்டரில் 3 லட்சம் ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்து சாதனை படைத்துள்ளார். அதேபோல மும்பையை சேர்ந்த ஒரு நபரும் 3 லட்சம் ரூபாய்க்கு, ஒரே ஒரு உணவகத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஸ்விக்கி மட்டுமல்ல, சோமாட்டோ ஆர்டரிலும் இந்தாண்டின் முடிசூடா மன்னன் பிரியாணி தான் என்பது கூடுதல் தகவல்.

Advertisement