Page Loader
2023-ல் அறிமுகமான புதிய இன்ஸ்டாகிராம் வசதிகள்
2023-ல் அறிமுகமான புதிய இன்ஸ்டாகிராம் வசதிகள்

2023-ல் அறிமுகமான புதிய இன்ஸ்டாகிராம் வசதிகள்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 29, 2023
10:14 am

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டு தங்களுடைய சமூக வலைத்தளப் பயனாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது, உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்படும் பிரபல நிறுவனமான இன்ஸ்டாகிராம். அப்படி இந்த ஆண்டு அறிமுகமான புதிய இன்ஸ்டாகிராம் வசதிகள் மறுபார்வை அடங்கிய தொகுப்பிது. இந்த ஆண்டு புதிய மற்றும் பெரிய அறிவிப்பாக, ஜூலை மாதம் இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையில் த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது மெட்டா. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள்ளேயே 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று அசத்தியது த்ரெட்ஸ். செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இணைந்து இயங்கக்கூடிய வகையிலான பல்வேறு புதிய வசதிகளை, இந்த ஆண்டு இன்ஸ்டா உள்ளிட்ட தங்களுடைய பல்வேறு சேவைகளிலும் அறிமுகப்படுத்தியது மெட்டா.

இன்ஸ்டாகிராம்

இந்த ஆண்டு அறிமுகமான இன்ஸ்டாகிராம் வசதிகள்: 

இன்டாகிராமின் முகப்புப் பக்கத்தில், நமக்குக் காட்டப்படும் பதிவுகள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகளை பயனாளர்களுக்கு வழங்கியது இன்டாகிராம். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழான பதிவுகள் நமக்கக் காட்டப்படாமல் நம்மால் தடுக்க முடியும். வாட்ஸ்அப்பைப் போல் இன்ஸ்டாகிராமிலும் பிராட்கேஸ்ட் சேனல்கள் வசதியை அந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது மெட்டா. இதன் மூலம், தங்களைப் பின்தொடர்பவர்களுடன் உருவாக்குநர்களால் நேரடியாக தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இன்ஸ்டகிராம் நோட்டிபிகேஷன்களால் பயனாளர்களின் வேலை தடைப்படாமல் இருக்க, Quiet மோடு ஒன்றை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இதன் மூலம், நமக்கு வரும் நோட்டிபிகேஷன்களை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைத்து. நமக்கு தேவைப்படும் போது மட்டும் பார்த்துக் கொள்ள முடிகிறது.