Page Loader
மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை!
இந்திய வங்கிகளை தொடர்ந்து தாக்கும் மால்வேர்கள் - அதிகரிப்பு

மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை!

எழுதியவர் Siranjeevi
Mar 30, 2023
11:49 am

செய்தி முன்னோட்டம்

இந்திய வங்கிகள் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 7 லட்சம் மால்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 லட்சம் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 14,983,271 மால்வேர் தாக்குதல்கள் பதிவாகியுள்ளது. ஆசியாவைக் குறிவைத்து, 10.51% தாக்குதல்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டுமே 44,949 முறை தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் வெளியாகியுள்ளது. எனவே, உலகளவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ அறிக்கையின்படி 6 முக்கியமான துறைகளில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்திய மால்வேர்கள்

இந்திய வங்கி மற்றும் உற்பத்தி தொழிலை தாக்கும் மால்வேர்கள் - அறிக்கை

இதில் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள், அரசு மற்றும் உற்பத்தி போன்றவைகள் உள்ளதாகவும், 16% அதிகரித்ததாகவும் டிரெண்ட் மைக்ரோ மேலாளர் விஜேந்திர கட்டியார் தெரிவித்துள்ளார். ஆனால், இதில் இந்திய வங்கித்துறையின் மீது உள்ள தாக்குதல்கள் 15,928 இருந்து 626 ஆக குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் 994 இருந்து 1,178 அதிகரித்துள்ளது. இதுவே உலகளவில் இணைய அச்சுறுத்தல்கள் 2022 ஆம் ஆண்டின் போது 146 பில்லியனை எட்டி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தல் கண்டறிதல்களில் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.