Loading...
நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் பிரம்மாண்ட பனிக்கோள் கண்டுபிடிப்பு: 6-வது குறுங்கோளாக உருவாக வாய்ப்பு
நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் பிரம்மாண்ட பனிக்கோள் கண்டுபிடிப்பு

நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் பிரம்மாண்ட பனிக்கோள் கண்டுபிடிப்பு: 6-வது குறுங்கோளாக உருவாக வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
03:55 pm

செய்தி முன்னோட்டம்

நமது சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதைக்கு அப்பால், மிக அடர்ந்த பனிக்கட்டியால் ஆன பிரம்மாண்டமான விண்வெளி பொருள் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2026 ED138 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், நமது சூரிய குடும்பத்தின் 6-வது அதிகாரப்பூர்வக் குறுங்கோளாக அங்கீகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. சிலியில் அமைந்துள்ள வேரா சி ரூபின் ஆய்வு மையத்தின் தரவுகளை பயன்படுத்தி, ஹார்வர்ட் & ஸ்மித்சோனியன் வானியல் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த வானியல் இயற்பியலாளர் மேத்யூ ஹோல்மேன் தலைமையிலான குழுவினர் இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கண்டுபிடிப்பு

ED138 பனிக்கோள் கண்டுபிடிப்பு

இந்த பனிக்கோள் 600 முதல் 1,500 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது புளூட்டோவின் சராசரி தொலைவை விடக் கூடுதலாக, சூரியனிலிருந்து சுமார் 46 வானியல் அலகுகள் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. *

பால்வெளி மண்டலத்தின் விண்மீன்கள் நிறைந்த அடர்ந்த பின்னணிப் பகுதியில் பயணித்ததால், இத்தனை ஆண்டுகளாக இது கண்டறியப்படாமல் இருந்துள்ளது.

ரூபின் ஆய்வுமையம் மற்றும் டார்க் எனர்ஜி கேமரா தரவுகளின்படி, நெப்டியூனின் ஈர்ப்பு விசையால் தூக்கி எறியப்பட்டதால் இது சூரிய குடும்பத்தின் தளத்திலிருந்து 25 டிகிரி கோணச் சாய்வில் சுற்றி வருகிறது.

அதிகாரப்பூர்வ குறுங்கோள்

6-வது குறுங்கோளாக மாறுமா?

தற்போது சூரிய குடும்பத்தில் புளூட்டோ, சீரிஸ், ஈரிஸ், ஹவ்மேயா மற்றும் மேக்மேக் ஆகிய 5 பொருட்கள் அதிகாரப்பூர்வ குறுங்கோள்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒரு விண்பொருள் குறுங்கோளாக அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், அது தன் சொந்த ஈர்ப்பு விசையால் உருண்டை வடிவத்தை பெற்றிருக்க வேண்டும்.

2026 ED138-ன் அளவு இதற்குப் போதுமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் இதர அகச்சிவப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இதன் வடிவம் மற்றும் மேற்பரப்புப் பண்புகள் உறுதி செய்யப்பட்ட பின் சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

ADVERTISEMENT