
ஆப்பிளின் புதிய 'IOS 16.5' இயங்குதள அப்டேட்.. என்னென்ன மாற்றங்கள்?
செய்தி முன்னோட்டம்
ஜூன் 5 முதல் 9-ம் தேதி வரை ஆப்பிளின் WWDC நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது IOS இயங்குதளத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்த IOS 16.5 அப்டேட்டில் சில புதிய வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஏற்கனவே இருந்த கோளாறுகளைக் களைந்திருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள் செய்திகளில் புதிதாக விளையாட்டு பக்கம் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பக்கத்தில் நாம் விரும்பிய விளையாட்டுகள், விளையாட்டு வீரர்கள் பின்தொடர்வது, பிடித்த தொடர்களைப் பற்றி செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பால்புதுமையினர் சுயமரியாதை மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி புதிய வால்பேப்பர்களை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். இந்த பால்புதுமையினர் மாதத்தை மையப்படுத்திய வால்பேப்பர்களை ஹோம் மற்றும் லாக் ஸ்கிரீன்கள் இரண்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆப்பிள்
வேறு என்ன மாற்றங்கள்.. எப்படி பதிவிறக்கம் செய்வது?
இவை தவிர புதிய பாதுகாப்பு மாற்றங்கள் பலவற்றையும் இந்த அப்டேட்டில் வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
மேலும், ஸ்பாட்லைட் குறித்த கோளாறு ஒன்றையும், பல்வேறு சாதனங்களுக்கிடையே ஸ்கிரீன் டைம் ஒருங்கிணையாத கோளாறையும் இந்த அப்டேட்டில் சரிசெய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்ய உங்கள் ஐபோனில் செட்டிங்கஸூக்குச் செல்லவும். அங்கே ஜெனரலை கிளிக் செய்து, சாஃப்ட்வேர் அப்டேட்டை கிளிக் செய்யவும்.
அப்டேட் பதிவிறக்கம் ஆனவுடன் இன்ஸ்டால் நவ் பட்டனை கிளிக் செய்யவும், அவ்வளவு தான்.
இந்த அப்டேட்டின் அளவு கொஞ்சம் அதிகம் என்பதால் வை-பையில் இந்த இயங்குதள அப்டேட்டை பதிவிறக்கம் செய்வது சிறந்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This is what’s new in iOS 16.5 👇 pic.twitter.com/sYLsKhzdY7
— Apple Hub (@theapplehub) May 18, 2023