செப்டம்பரில் வெளியாகும் iPhone 18 Pro: கேமரா முதல் பேட்டரி வரை ஆப்பிள் கொண்டு வரும் 5 முக்கிய மாற்றங்கள்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தயாரிப்பான iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை என்றாலும், நம்பகமான கசிவுகள் மூலம் இந்த புதிய மாடல்களின் சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன. இணையத்தில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையில், புதிய ஐபோன் 18 ப்ரோ வரிசையில் நாம் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்கள் இதோ:
விவரங்கள்
டிசைன் மற்றும் புதிய வண்ணங்கள்
18 ப்ரோ மேக்ஸ் மாடல் 5,500mAh-க்கும் அதிகமான பேட்டரியைக் கொண்டிருப்பதால், அதன் தடிமன் சுமார் 9 மிமீ ஆகவும், எடை 240 கிராம் வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த முறை ஆப்பிள் நிறுவனம் 4 புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அவை, டார்க் செர்ரி, லைட் புளூ, டார்க் கிரே, மற்றும் சில்வர்.
திரையின் அளவுகள் முந்தைய மாடல்களைப் போலவே 6.3 இன்ச் மற்றும் 6.9 இன்ச் ஆகத் தொடரும். ஆனால், திரையின் மேல் இருக்கும் டைனமிக் ஐலேண்ட் அளவு சுமார் 35% வரை குறைக்கப்பட்டு மிகச் சிறியதாக மாற்றப்பட உள்ளது.
மேலும், புதிய LTPO+ டிஸ்ப்ளே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், பேட்டரி பேக்கப் கணிசமாக உயரும்.
கேமரா
கேமரா, ப்ராசஸர் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்கள்
ஐபோன் வரலாற்றிலேயே முதன்முறையாக, அதன் 48MP முதன்மை கேமராவில் மெக்கானிக்கல் வேரியபிள் அபெர்ச்சர் தொழில்நுட்பம் கொண்டு வரப்படுகிறது.
இதனால், பகல் நேரத்தில் அதிகப்படியான வெளிச்சம் சென்சாருக்குள் நுழைவதை தடுத்து துல்லியமான படங்களை எடுக்கவும், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்தை உள்வாங்கி மிகத் தெளிவான போக்கே விளைவுடன் கூடிய புகைப்படங்களை எடுக்கவும் உதவும்.
iPhone 18 Pro மாடல்கள் TSMC நிறுவனத்தின் அதிநவீன 2nm தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட A20 ப்ரோ சிப்செட் மூலம் இயங்கும்.
இது முந்தைய A19 ப்ரோ சிப்பை விட 15% வேகமான செயல்திறனையும், 30% கூடுதல் மின் சேமிப்பையும் வழங்கும்.
மேலும், சிப்பிற்கு மிக அருகில் புதிய WMCM பயன்படுத்தப்படுவதால், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் மின்னல் வேகத்தில் செயல்படும்.
விலை
பேட்டரி மற்றும் உத்தேச விலை
ஐபோன் 18 ப்ரோ மாடலில் 4,288mAh பேட்டரியும், ப்ரோ மேக்ஸ் மாடலில் 5,567mAh பேட்டரியும் இடம்பெற வாய்ப்புள்ளது.
2nm சிப் மற்றும் புதிய டிஸ்ப்ளேவுடன் இணையும் போது, இது எளிதாக 2 நாட்கள் வரை உழைக்கும்.
உலகளாவிய மெமரி சிப் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், புதிய மாடல்களின் விலை முந்தைய பதிப்புகளை விட $100 முதல் $200 வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை) அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொழில்முறை கணிப்புகள் தெரிவிக்கின்றன.