LOADING...
ஆப்பிளின் iOS 26 கேமரா ஆப்-இல் பல புதிய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது
ஆப்பிள் நிறுவனம் iOS 26 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது

ஆப்பிளின் iOS 26 கேமரா ஆப்-இல் பல புதிய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jun 10, 2025
08:10 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம் தனது கேமரா செயலிக்கான புதுப்பிக்கப்பட்ட இடைமுகத்தை சமீபத்திய iOS 26 புதுப்பிப்பில் வெளியிட்டுள்ளது. இந்த மறுவடிவமைப்பு, அடிக்கடி பயன்படுத்தப்படும் அம்சங்களை மேலும் அணுகக்கூடியதாகவும் உள்ளுணர்வுடனும் மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கூறுகிறது. கேமராவின் பிரதான திரை இப்போது புகைப்படம் மற்றும் வீடியோ முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும், சினிமாடிக், போர்ட்ரெய்ட் மற்றும் ஸ்லோ-மோ போன்ற பிற விருப்பங்கள் இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் கிடைக்கும்.

பயனர் அனுபவம்

செட்டிங்ஸ்களில் என்ன மாறிவிட்டது?

புதுப்பிக்கப்பட்ட interface கேமரா செட்டிங்ஸ் மீதான பயனர் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது. இதில், மேலே ஸ்வைப் செய்வதன் மூலம், பயனர்கள் எக்ஸ்போஷர், டைமர் மற்றும் அபெர்ச்சர் போன்ற தொடர்புடைய அமைப்புகளை அணுகலாம். இதற்கிடையில், தெளிவுத்திறன் (resolution) மற்றும் frame rate கட்டுப்பாடுகள் ஃபிளாஷ் மற்றும் இரவு பயன்முறைக்கான நிலைமாற்றங்கள் உள்ளிட்டவையும் திரையின் மேற்பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இந்த ஐகான்களை நீண்ட நேரம் அழுத்தினால், மேலும் விரிவாக்கப்பட்ட உள்ளமைவு மெனுக்கள் திறக்கும்.

தகவல்

புதிய புதுப்பிப்பு விஷுவல் க்ளட்டர்களைக் குறைக்கும்

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தளவமைப்பு, விஷுவல் க்ளட்டர்களைக் குறைத்து, மேம்பட்ட கருவிகளை எளிதில் அணுகக்கூடியதாக வைத்திருக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. புதிய இடைமுகம் தற்போது iOS 26 டெவலப்பர் பீட்டாவில் கிடைக்கிறது, மேலும் செப்டம்பரில் பரவலாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.