Page Loader
ஆப்பிள் WWDC 2023: அறிமுகமானது புதிய "விஷன் ப்ரோ" AR ஹெட்செட்!
புதிய விஷன் ப்ரோ ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

ஆப்பிள் WWDC 2023: அறிமுகமானது புதிய "விஷன் ப்ரோ" AR ஹெட்செட்!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 06, 2023
07:24 am

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய AR ஹெட்செட் குறித்த அறிவிப்பை ஆப்பிள். நிஜ மற்றும் டிஜிட்டல் உலகை இணைக்கும் 'விஷன் ப்ரோ' (Vision Pro) AR ஹெட்செட்டை 3,499 டாலர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட்டாக இதனை உருவாக்கியிருந்தாலும், முழுவதுமான விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டாகவும் இதனைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதலில் அமெரிக்காவில், அதனைத் தொடர்ந்து பிற நாடுகளிலும் இந்த ஹெச்செட் வெளியிடப்படவிருக்கிறது.

ஆப்பிள்

என்னென்ன அம்சங்கள்: 

இந்த புதிய AR சாதனத்தை கண்கள், கைகள் மற்றும் குரலைக் கொண்டு இயக்க முடியுமாம். இந்த ஹெட்செட்டுடன் புதிதாக விஷன்OS (VisionOS) இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். அதாவது கண் அசைவைக் கொண்டே இந்த ஹெட்செட்டை நம்மால் இயக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். நூற்றுக் கணக்கான ஐபேடு மற்றும் ஐஓஎஸ் செயலிகளை இந்த ஹெட்செட்டுடன் பயன்படுத்த முடியும். மேலும், ஆப்பிளின் ப்ளுடூத் சாதனங்களான மேஜிக் கீபோர்டு மற்றும் மேஜிக் ட்ராக்பேடு ஆகியவற்றையும் இந்த ஹெட்செட்டுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். M2 மற்றும் R1 என இரண்டு சிப்களை இந்த விஷன் ப்ரோ ஹெட்செட்டில் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த விஷன் ப்ரோவுக்கு ஆப்பிள் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post