Loading...
விண்வெளியில் நடந்து சாதனை படைத்த இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்
இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்

விண்வெளியில் நடந்து சாதனை படைத்த இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 07, 2026
03:56 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வெளியே தனது முதல் விண்வெளி நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். அனில் மேனன் மற்றும் நாசா விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயர் ஆகிய இருவரும் இணைந்து யு.எஸ். ஸ்பேஸ்வாக் 96 திட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர். இவர்கள் ஆகஸ்ட் 6 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சுமார் 6 மணி நேரம் 27 நிமிடங்கள் தங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முக்கியமான பணிகளைச் செய்து முடித்தனர்.

பணிகள்

விண்வெளியில் மேற்கொண்ட முக்கிய பணிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் 3B மின்னாற்றல் வழித்தடத்தை புதிய சூரிய ஒளித் தகடுகள் (IROSA) பொருத்துவதற்காக தயார் செய்வதே இவர்களின் முதன்மைப் பணியாக இருந்தது.

இந்த புதிய ரோல்-அவுட் சோலார் அமைப்புகள், முதிர்ந்த நிலையத்திலிருக்கும் விண்வெளி மையத்திற்கு கூடுதல் மின்சாரத்தை வழங்கி, அதன் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

ஆகஸ்ட் 7 அன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு இந்த விண்வெளி நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்ததாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

அனில் மேனனுக்கு இதுவே முதல் ஸ்பேஸ்வாக் அனுபவமாகும்.

அதேவேளையில், அவருடன் பயணித்த ஜெசிகா மேயருக்கு இது 6-வது விண்வெளி நடைபயணமாகும்.

எதிர்காலத் திட்டங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் எதிர்காலத் திட்டங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நடத்தப்பட்ட 281-வது ஸ்பேஸ்வாக் இதுவாகும்.

இச்சாதனை பயணத்தை தொடர்ந்து, அனில் மேனன் விண்வெளி நிலையத்தில் தங்கி தனது அறிவியல் ஆய்வுகளையும் சர்வதேச விண்வெளி மைய பராமரிப்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT