ஆட்குறைப்பு நடவடிக்கை: 18,000 பணியாளர்களை வெளிய அனுப்ப அமேசான் திட்டம்?
செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், விரைவில் அமேசான் நிறுவனம், கிட்டத்தட்ட 18,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவன வரலாற்றில், இது மிகப்பெரிய ஆட்குறைப்பு எண்ணிக்கையாகும். உலகம் முழுவதும், 1.5 மில்லியன் பணியாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், எந்தெந்த நாடுகளில் ஆட்குறைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த போகிறது என்று தகவல் இல்லை. பெரும்பாலான வேலை நீக்கம், நுகர்வோர் சில்லறை வணிகம் மற்றும் அதன் மனித வளப் பிரிவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், வேலை நீக்கத்தை பற்றி வெளி உலகிற்கு கசியவிட்டதால், இந்நிறுவனம், இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தின் போது, அமேசானின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அப்போது, கிட்டத்தட்ட 743,000 பேரை பணியமர்த்தியாக தெரிகிறது.
ஆட்குறைப்பில் அமேசான்
அதன் பிறகு, அமேசான் வணிகம் மந்த நிலையை எட்டியுள்ளதாகவும், இதனால், அந்நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்த, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் யார் என்பதை, ஜனவரி 18க்குள் தெரிவிக்கப்படும் என அமேசான் அறிக்கை கூறுகிறது. இந்த ஆட்குறைப்பு பற்றி ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளதாகவும், எனினும் அதன் அளவு மற்றும் காலத்தை இப்போது தான் நிர்ணையித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை போன்ற செயலிகள் தலைமையிடமான மெட்டா நிறுவனமும், சமீபத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட்டது. சென்ற ஆண்டு நவம்பரில், மெட்டா தனது பணியாளர்களில் 13% பேரை குறைப்பதாக அறிவித்தது. எலன் மஸ்க், அக்டோபரில் நிறுவனத்தின் ட்விட்டர் CEO -வாக பதவியேற்றதும், பல ஊழியர்களை நீக்குவதாக உத்தரவிட்டார்.