
சாம்சங்கின் புதிய அறிமுகமான Galaxy Ring உங்கள் டயட்டை திட்டமிட உதவும்
செய்தி முன்னோட்டம்
சாம்சங்கின் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் புதிய அறிமுகமான கேலக்ஸி ரிங், மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024இல் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த ரிங் உங்கள் தினசரி உணவு திட்டமிடலில் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதுமையான அம்சம், சாம்சங்கின் Mobile eXperience (MX) குழுவிற்கும், சாம்சங் வீட்டு உபயோகப் பிரிவிற்கும் இடையேயான கூட்டாண்மையின் விளைவாகும்.
சாம்சங் உணவை, கேலக்ஸி வளையத்துடன் ஒருங்கிணைப்பதே இதன் நோக்கமாகும்.
இதன் மூலம், இந்த ரிங்கை அணியக்கூடிய பயனர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் உணவு மற்றும் உணவுத் திட்டங்களை பரிந்துரைக்க முடியும்.
உணவு பரிந்துரைகள்
கலோரி உட்கொள்ளல் மற்றும் பிஎம்ஐ அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கும்
கேலக்ஸி ரிங், நாள் முழுவதும் பயனர் செயல்பாட்டைக் கண்காணிக்கும். அதைத் தொடர்ந்து, சாம்சங் ஃபுட், AI திறன்களைக் கொண்ட ஸ்மார்ட் சாம்சங் குளிர்சாதனப்பெட்டியுடன் இணைந்து, உணவுப் பரிந்துரைகளை வழங்கும்.
இந்த பரிந்துரைகள், கலோரி உட்கொள்ளல் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) போன்ற காரணிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்படும்.
சாம்சங் அடுப்பு இணைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப வீட்டுச் சூழலில் (Smart Home), அது தானாகவே சமையல் வெப்பநிலை மற்றும் கால அளவை சரிசெய்ய முடியும்.
Samsung Galaxy Z Fold 6 மற்றும் Z Flip 6 வெளியீடுகளுடன் இணைந்து, Samsung Galaxy Ring இன் வெளியீடு ஜூலை மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.ஆரம்பத் தொகுப்பாக 4,00,000 யூனிட்களை உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.