Page Loader
365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம்
ஏர்டெல்லின் புதிய ஓடிடி வருடாந்திர ரீச்சார்ஜ் திட்டம் அறிமுகம்

365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம்

எழுதியவர் Siranjeevi
Feb 15, 2023
10:00 am

செய்தி முன்னோட்டம்

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது. அதாவது 365 நாட்களுக்கும் பிரபலமான ஓடிடி சேவைகளை பெற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல்லின் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் தான் அது. இந்த திட்டம் மிகவும் தனித்துவமான ஒரு திட்டமாக இருக்க 2 முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணமாக இந்த திட்டத்தில் பல வகையான ஓடிடி சந்தாக்களை இலவசமாக பெற முடியும். இரண்டாவது காரணம், பொழுது போக்கை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான டேட்டா நன்மைகளை வழங்கி வருகிறது.

ஏர்டெல்

ஏர்டெல்லின் வருடாந்திர திட்டம் - ரூ.3359 ரீச்சார்ஜில் அப்படி என்ன உள்ளது?

வேறு என்னென்ன நன்மைகள் ரூ.3359 திட்டமானது 1 ஆண்டுக்கு அல்லது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். டேட்டா நன்மைகளில், தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். அடுத்து, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். ஓடிடி-யை பொறுத்தவரை அமேசான் ப்ரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டுமே கிடைக்கிறது. இதற்கு, இலவச ஹலோட்யூன்ஸ் மற்றும் வின்க் ம்யூசிக் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்கும். மேலும், ஏர்டெல்லின் ரூ.3359 திட்டமானது, நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க்கின் கீழும் வேலை செய்யும். எனவே, ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளை பயன்படுத்துவதற்காக அதன் 4ஜி வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.