Page Loader
எக்ஸ்ரே மூலம் பாலினத்தை கண்டுபிடிக்கும் AI அமைப்பு அறிமுகம் 

எக்ஸ்ரே மூலம் பாலினத்தை கண்டுபிடிக்கும் AI அமைப்பு அறிமுகம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2024
01:24 pm

செய்தி முன்னோட்டம்

ரேடியோகிராஃப்களின் அடிப்படையில் ஒரு நபரின் பாலினத்தை கண்டறியும் இயந்திர கற்றல் முறையை பிரேசிலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதாவது ஒருவரின் பல் எக்ஸ்ரே படங்கள் மூலம் அவரது பாலினத்தை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டறிந்துவிடுகிறது. எக்ஸ்ரே படத்தின் தெளிவுத்திறன் நன்றாக இருந்து, அந்த எக்ஸ்ரே படத்தில் உள்ளவரின் வயது 16க்கு மேல் இருந்தால் அவரின் பாலினத்தை இந்த தொழில்நுட்பம் 96% துல்லியத்துடன் கணித்துவிடுகிறது. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பாலினத்தை இந்த அமைப்பால் துல்லியமாக கணிக்க முடியவில்லை. இந்த கண்டுபிடிப்புகள் தடயவியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பிரேசில் 

தடயவியல் நிபுணர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் உதவி 

தடயவியல் நிபுணர்கள் மனித எச்சங்களின் அடிப்படையில் ஒரு நபரை அடையாளம் காண விரும்பும் போது, ​​இறந்தவரின் பாலினத்தை கண்டுபிக்க இந்த அமைப்பு பெரும் உதவியாக இருக்கும். எலும்புகள், எச்சங்கள் ஆகியவற்றால் தான் வரலாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதால் வரலாற்றை கணிக்க இது போன்ற அமைப்புகள் இன்றியமையாததாக இருக்கும். எலும்புகளில் இருந்து தேவையான தகவல்களைப் பிரித்தெடுக்கும் தடயவியல் முறைகள் மிக முக்கியமானவையாகும். ஏனெனில் பெரும்பாலும் எலும்புகளே வரலாற்றின் எச்சங்களாக நமக்கு கிடைக்கிறது. சில நேரங்களில் தடயவியல் நிபுணர்களுக்கு தாடை மற்றும் பற்கள் மட்டுமே கிடைக்கின்றன. மேலும், பெரும் விபத்தின் போதும் மனித உடல்களை அடையாளம் காணவும் இது உதவும்.