Loading...
ஏஐயால் வேலை போயிடும்னு பயப்படுறீங்களா? 10 வருஷத்தில் 5% வேலை தான் போகும்! நோபல் பரிசு வெற்றியாளர் கணிப்பு
10 ஆண்டுகளில் 5% மனித வேலைகளை மட்டுமே ஏஐ மாற்றும் என நோபல் பரிசு வெற்றியாளர் கணிப்பு

ஏஐயால் வேலை போயிடும்னு பயப்படுறீங்களா? 10 வருஷத்தில் 5% வேலை தான் போகும்! நோபல் பரிசு வெற்றியாளர் கணிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 09, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், மனித வேலைவாய்ப்புகளில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகவும் வரம்பிற்குட்பட்டதாகவே இருக்கும் என 2024 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற டேரன் அசெமோக்லு தெரிவித்துள்ளார். எம்ஐடி பேராசிரியரான இவர், அடுத்த பத்து ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யும் மொத்த வேலைகளில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே மாற்றக்கூடும் எனக் கணித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

வேலை இழப்பு அல்ல

பணிகளின் தானியங்கிமயமாக்கல்

இந்த 5 சதவீதக் கணிப்பு என்பது 5 சதவீத வேலைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதைக் குறிக்கவில்லை என அசெமோக்லு விளக்குகிறார்.

ஒரு நபர் செய்யும் வேலையில் பலவிதமான பணிகள் அடங்கியுள்ளன. அதில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஏஐ செய்யும்.

மனிதர்களின் அனுபவம், தனிப்பட்ட கவனிப்பு மற்றும் முடிவெடுக்கும் திறன் தேவைப்படும் பிற பணிகளை மனிதர்களே தொடர்ந்து செய்வார்கள்.

எனவே முழுமையான வேலை இழப்பு உடனடியாக ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நடைமுறை சிக்கல்

ஏஐ பயன்பாட்டில் உள்ள நடைமுறை சிக்கல்கள்

ஒரு ஏஐ மாடலால் ஒரு பணியை செய்ய முடிந்தாலும், நிறுவனங்கள் தங்களது பணி செயல்முறைகளை மாற்றி, புதிய தொழில்நுட்பத்தை நடைமுறையில் ஒருங்கிணைக்க நீண்ட காலம் எடுக்கும்.

பிடபிள்யூசி அமைப்பின் 2026 ஆராய்ச்சியும், ஏஐ தொழில்நுட்பத்தை வெறும் செலவுக் குறைப்பிற்குப் பயன்படுத்தாமல் புதிய வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் நிறுவனங்களே அதிகப் பயனடைகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதனால் ஏஐ மூலமான உற்பத்தித்திறன் உயர்வு எதிர்பார்த்ததை விட மிதமாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தொழிலாளர்

தொழிலாளர்களுக்கு ஆதரவான ஏஐ தேவை

மனிதர்களுக்கு பதிலாக புதிய வேலைகளை உருவாக்கவும், அவர்களின் ஆற்றலை அதிகரிக்கவும் தொழிலாளர்களுக்கு ஆதரவான ஏஐ பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என அசெமோக்லு வலியுறுத்துகிறார்.

இருப்பினும், வழக்கமான, மீண்டும் மீண்டும் செய்யப்படும் கணினி சார்ந்த பணிகளை செய்யும் தொழிலாளர்கள் பாதிப்பை சந்திக்கக் கூடும்.

மனிதர்களை மாற்றுவதற்குப் பதிலாக, அவர்களின் பணித்திறனை மேம்படுத்தும் கருவியாக ஏஐ பயன்படுத்தப்பட்டால், அதன் தாக்கம் நேர்மறையாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT