LOADING...
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்! நிபுணர் எச்சரிக்கை
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும் என நிபுணர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரிக்கை

ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்! நிபுணர் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2025
05:59 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ'யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார். ஏஐ ஆனது அறுவை சிகிச்சை நிபுணர்கள், கோடிங் வல்லுநர்கள் மட்டுமின்றி, தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓக்கள்) உட்பட யாருக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ரஸ்ஸல், ஏஐ அமைப்புகள் தற்போது நாம் செய்யும் கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் செய்யும் திறன் கொண்டவை என்று கூறினார். உயர்தர நிபுணத்துவம் தேவைப்படும் அறுவை சிகிச்சை போன்ற பணிகள்கூட விரைவான ஆட்டோமேஷனைச் சந்திக்கும் என்று அவர் நம்புகிறார்.

சிஇஓ

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கும் ஆபத்து

தற்போது பெரும்பாலான பணிநீக்கங்கள் நடுத்தர மற்றும் கீழ்-நிலை ஊழியர்களைப் பாதித்தாலும், நீண்ட காலப் போக்கில் நிர்வாகிகளும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று ரஸ்ஸல் வலியுறுத்தினார். "போட்டி நிறுவனங்கள் ஏஐயால் இயக்கப்படும் சிஇஓக்களைப் பயன்படுத்துகின்றன. அவை சிறப்பாகச் செயல்படுகின்றன என்று வாரியம் ஒரு சிஇஓவிடம் சொன்னால், அவர் தனது முடிவெடுக்கும் அதிகாரத்தை ஏஐ அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்." என்று அவர் கூறினார். சுந்தர் பிச்சை போன்ற பிற தொழில்நுட்ப ஆளுமைகளும், ஏஐ ஒருநாள் சிஇஓவின் பணிகளை எளிதில் செய்யும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலைமை காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் விரைவில் ஒரு பெரிய வேலைவாய்ப்பின்மை நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்றும் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார்.

Advertisement