
செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1
செய்தி முன்னோட்டம்
சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் முதல் சூரிய ஆராய்ச்சி திட்டத்தை செய்லபடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான விண்கலமான ஆதித்யா L1, வரும் செப்.2ஆம் தேதி ஏவப்படலாம் என்று அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின்(எஸ்ஏசி) இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் தெரிவித்துள்ளார்.
இதற்கான செயற்கைக்கோள், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-SHAR-க்கு எடுத்து செல்லப்பட்டு ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
டிஹல்
இந்தியாவின் முதல் சூரிய ஆராய்ச்சி திட்டம்
"சூரியனைப் பற்றி ஆய்வு செய்ய, நாங்கள் ஆதித்யா-L1 திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது தயாராகி, ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளத. செப்டம்பர் 2ம் தேதி இது ஏவப்படும் வாய்ப்பு உள்ளது," என்று நிலேஷ் எம் தேசாய் கூறியுள்ளார்.
ஆதித்யா L1 ஆய்வுக்கலனை, பூமி மற்றும் சூரியனுக்கிடையே உள்ள லெக்ராஞ்சு புள்ளி 1ன்(L1) அருகே ஹேலோ சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்தப் புள்ளியில் இருந்து ஒரு வருடத்தின் அனைத்து நாட்களிலும், அனைத்து நேரமும் எந்தத் தடையுமின்றி சூரியனையும், தட்ப வெப்ப நிலையில் அதன் தாக்கத்தையும் ஆய்வு செய்ய முடியும்.
இந்த ஆதித்யா L1 திட்டம் தான், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ செயல்படுத்தும் முதல் திட்டமாகும்.