Page Loader
விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன?
oneplus 11 5g விற்பனை இந்தியாவில் தொடக்கம்

விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன?

எழுதியவர் Siranjeevi
Feb 14, 2023
06:31 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல்(பிப்ரவரி 14) தொடங்கி உள்ளது. இந்த ஒன்பிளஸ் 11 போன் ஆனது, Amazon ஆன்லைன் தளம் மூலம் ரூ. 56,999க்கு விற்கப்படுகிறது. ஆனால், இந்த விலைக்கு இந்த போனை வாங்கலாமா என்பதற்கான 5 காரணங்களைத் தெரிந்துகொள்வோம். OnePlus 11 5G சலுகைகள் ஒன்பிளஸ் 11 போன் ஆனது அமேசான் வலைத்தளத்தில், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கும், இஎம்ஐ மற்றும் நான்-இஎம்ஐ பரிவர்த்தனைக்கு ரூ.1,000 தள்ளுபடியை தருகிறது. கேமரா கேமராவைப் பொறுத்த வரை 50எம்பி சோனி IMX890 முதன்மை சென்சார், 48MP அல்ட்ரா-wide-ஐக் கொண்ட ஒரு Hasselblad-டியூன் செய்யப்பட்ட பின்புற கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது . முன்பக்கம் 16எம்பி கேமரா கொண்டுள்ளது.

Oneplus 11 5G

Oneplus 11 5g சிறப்பு அம்சங்கள் வாங்க வேண்டிய காரணங்கள் இங்கே

OnePlus 11 இல் அலெர்ட் ஸ்டைலர் ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இவை ஸ்மார்ட்போனை ம்யூட் செய்யவோ, வைப்ரேட்டில் வைக்கவோ பல வேலைகளை எளிமையாக்குகிறது. சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் ஸ்மார்ட்போனிற்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும். செயல்திறன் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனில் குவால்காமின் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் கொண்டுள்ளது. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஒன்பிளஸில் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. வெறும் 25 நிமிடங்களில் 0 - 100% பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.