ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் உறுதி செய்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டதால் ஃபிளாகான் 9 ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்லிங்கின் பால்கன் 9 ஏவுதலின் போது, இரண்டாம் நிலை இயந்திரம் அதன் இரண்டாவது எரிப்பை முடிக்கவில்லை. இதன் விளைவாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் திட்டமிடப்பட்டதை விட குறைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது
ஸ்பேஸ்எக்ஸ் இதுவரை 5 செயற்கைக்கோள்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவற்றைப் சரி செய்ய முயற்சித்து வருகிறது. "10 செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொண்டு, அவற்றின் அயனி உந்துதல்களைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையை உயர்த்த ஸ்டார்லிங்க் குழு முயற்சித்தது. ஆனால் அவை அவற்றின் பெரிஜி அல்லது அவற்றின் நீள்வட்ட சுற்றுப்பாதையின் மிகக் குறைந்த புள்ளியுடன், பூமியில் இருந்து 135 கிமீ உயரத்தில் மிக அதிக இழுவை சூழலில் உள்ளன." என்று ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. எனவே, 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் செயற்கைக்கோள்கள் மீண்டும் நுழைவது வட்டப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுக்கு அல்லது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது.