Page Loader
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ்
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ்

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை கட்டமைக்க நிதி அளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ்

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 28, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

அடுத்து எத்தனை ஆண்டு காலம் இந்தப் பூமியில் நாம் உயிர் வாழ்வோம் எனத் தெரியாது. ஆனால், அடுத்த 10,000 ஓடக்கூடிய கடிகாரம் ஒன்றைக் கட்டமைத்து வருகிறது 'லாங் நௌ' (Long Now) நிறுவனம். கணினி அறிவியலாளரான டேனி ஹில்லிசின் கனவு தான் இந்த 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம். இதனை ஒரு கலைப்படைப்பாகவும், 'குறுகிய' வரலாறு கொண்ட மனித குலத்தின் நினைவுச் சின்னமாகவும் உருவாக்கி வருகின்றனர். இந்த 10,000 ஆண்டு காலம் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்குவதற்கான செலவினங்களை ஏற்றிருப்பதோடு, தனக்கு சொந்தமான டெக்சாஸ் மாகாண மலையிலேயே அதனை வடிவமைக்க இடமும் அளித்திருக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பசாஸ்.

அமேசான்

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரம்: 

இந்த கடிகாரமானது, சாதாரண கடிகாரங்களைப் போல இயங்காதாம். இதன் நொடி முள்ளானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நகருமாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலியெழுப்பும் வகையிலும் இந்தக் கடிகாரத்தை வடிவமைத்து வருகின்றனர். இதுவரை இந்த கடிகாரத்தின் கட்டமைப்புக்காக 350 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 2018ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானம் இன்னும் முடிவடையவில்லை. எப்போது முடிவடையும் என்பது குறித்த தகவல்களும் யாராலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. 500 அடி உயரத்திற்குக்க கட்டப்பட்டு வரும் இந்தக் கடிகாரத்தை Clock of the Long, 10,000 year Clock எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். 10,000 ஆண்டுகள் மனித நாகரீகம் இந்தப் பூமியில் பிழைத்திருக்குமா?

ட்விட்டர் அஞ்சல்

10,000 ஆண்டு கடிகாரம் குறித்த ஜெஃப் பசாஸின் எக்ஸ் பதிவு: