சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்
ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய தனது பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில், சந்திரயான்-3இன் ரோவரான பிரக்யான் நிலவில் மற்றொரு சாதனை படைத்துள்ளது. பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டருக்கு மேல் பயணித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. எனினும், 100 மீட்டரை தாண்டி பயணித்த பிறகும் பிரக்யான் ரோவர் இன்னும் வலுவாக இயங்கி வருவதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திரயான் 2இன் ரோவர் மற்றும் லேண்டரை "தூங்க" வைக்கும் பணி இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்றும் இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார். "ரோவர் மற்றும் லேண்டரை தூங்க வைக்கும் செயல்முறை ஓரிரு நாட்களில் தொடங்கும், ஏனெனில் அவை இரவில் தாக்குப்பிடிக்க வேண்டும்" என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.