இனிப்புகளை இப்படி சாப்பிட்டால், உடல் எடை பற்றி கவலை பட தேவை இல்லை
குலாப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட ஆர்வம் இருந்தாலும், உடல் எடையை கட்டுக்குள் வைக்க, அவற்றை அரைமனதோடு தவிர்த்துவிட்டு செல்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். ஐஸ் கிரீம், குலாப் ஜாமூன் போன்ற டெஸெர்ட் வகை உணவுகளை தவிர்க்காமல் உடல் எடையைப் பேணுவது எப்படி என்று இதில் தெரிந்து கொள்ளலாம். அளவை குறைத்துக் கொள்ளுங்கள்: குலாப் ஜாமூன் போன்ற இனிப்பு வகைகளை உங்களுக்கு உபசரிக்கும்போது, உங்கள் பகுதியைக் குறைத்துக்கொள்ளுங்கள். பல துண்டுகளை வைத்திருப்பதற்கு பதிலாக, ஒன்றை மட்டும் வைத்திருங்கள். இதன் மூலம், உடல்நிலையை பேணுவதோடு இனிப்பையும் உட்கொள்ளலாம். நிறைய சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகளைத் தவிர்த்து, குறைவான கலோரிகளைக் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடலுக்கு வேலை கொடுப்பது முக்கியம்
உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இனிப்பை பகிர்ந்து கொள்வதன் மூலம் நேரத்தை இன்னும் சிறப்பாக ஆக்குங்கள். ஒரு முழு இனிப்புத் தட்டை நீங்களே உண்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளியுங்கள். பகிர்தல் மூலம், நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவை குறைக்கலாம். மேலும் உங்கள் மனதை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலமும் உணவுக் கட்டுப்பாட்டை பேணலாம். கடைசியாக, உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். தினமும் நடைப்பயிற்சி அல்லது விளையாட்டு போன்றவற்றின் மூலம் கூடுதல் கலோரிகளை எரித்து, உடல்நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம்.