மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாவின் நன்மைகள்
செய்தி முன்னோட்டம்
அனைத்துமே எந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில், நாம் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதை யோகா பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும்.
யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். யோகா என்பது நம் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி, உடலை வளைத்து, சுருக்கி, நீட்டி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு செய்யும் பயிற்சி ஆகும்.
யோகா பயிற்சியை நாம் தினசரி செய்வதன் பல நன்மைகள் பெறலா.
தினமும் 10 நிமிடம் யோகாசனம் செய்தால் கூட போதும், அற்புதமான வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள முடியும் என்பது யோகா பயிற்சியாளர்களின் அறிவுரை.
யோகாவின் நன்மைகள்
ஆரோக்கியம் தரும் யோகா முறைகள் நமக்கு எவ்வாறு நன்மையை தருகிறது?
சரியான பயிற்சி பெற்று யோகா செய்யும் போது, நம் உடலுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மேலும், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளதால், உடல் எடை குறையும், ஆரோக்கியமாக உணர்வீர்கள்.
அதிகப்படியான கணிப்பொறியைப் பயன்படுத்துபவர்களுக்கு கண் எரிச்சல், வலி போன்றவற்றை எளிமையான யோகா பயிற்சிகள் கொண்டே சரி செய்ய இயலும்.
யோகா தினமும் செய்வதால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
யோகாவின் மூலமாக இருதய சம்மந்தப்பட்ட நோய்களை கூட தடுக்க முடியும்.
உடல் நோய்களை மட்டுமல்ல மனம் சார்ந்த பிரச்சனைகளான மன இறுக்கம், பயம், மன அழுத்தம், போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
எனவே நோய் இல்லாமல் உடலைப் பேணி பாதுகாக்க நாம் தினமும் யோகா பயிற்சியை செய்வோம்.