உலக சுற்றுச்சூழல் தினம்: சுற்றுசூழலுக்கு பாதகம் இல்லாமல் கார்பன் தடத்தைக் குறைத்து பயணிக்க டிப்ஸ்!
பயணிப்பதும் புதிய இடங்களை ஆராய்ந்து சுற்றி பார்ப்பதும் நம்மில் பெரும்பாலோருக்கு உற்சாகம் தரும். பயணம் செய்வதால் நமது சுற்றுசூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கார்பன் தடத்தைக் குறைக்கும் வழிகளையும் நினைவில் கொள்ள வேண்டும். பசுமையான பயணம்: நீங்கள் ரயில் அல்லது பேருந்து போன்ற சிறிய கார்பன் தடம் கொண்ட மாற்று வழியில் பயணிக்கலாம். விமானங்களில் பயணிப்பதால் உங்களுக்கு அதிக அளவிலான எரிபொருள் மற்றும் பணமும் செலவழிக்கப்படுகிறது. மறு பயன்பாட்டு பொருட்களை பேக் செய்யவும்: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், ஷாப்பிங் பைகள், காபி கோப்பைகள் மற்றும் உணவுப் பாத்திரங்கள் போன்ற பொருட்கள் ஒவ்வொன்றின் உற்பத்திக்கும் இயற்கை வளங்கள், ஆற்றல் மற்றும் நீர் தேவைப்படுகிறது. மேலும் அவை மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது.
உலக சுற்றுச்சூழல் தினம்
தங்கும் விடுதி: உலகெங்கிலும் உள்ள பல ஹோட்டல்கள், லாட்ஜ்கள் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. எனவே பயணம் செய்யும் போது, உங்கள் கார்பன் தடயத்தைக் குறைக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்குமிடத்தைத் தேடுங்கள். நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: நடைபயிற்சி & சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை நகரத்தை சுற்றிப்பார்க்க சிறந்த வழியாகும். இதனால் உடற்பயிற்சி செய்தது போலும் உணர்வீர்கள். வெளிநாட்டிற்குச் செல்லும் பட்சத்தில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். உள்ளூர் உணவுகள்: ஒரு புதிய இடத்திற்குச் செல்லும்போது, உள்ளூர் சிறப்பு உணவு வகைகளைத் தேடி உண்ணுங்கள். இறக்குமதி செய்யப்பட்ட உணவை விட உள்நாட்டு உணவைத் தேர்ந்தெடுப்பது, உணவுப் போக்குவரத்தில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கிறீர்கள் எனலாம்.