அசால்ட்டாக சாமர்சால்ட் அடித்த சிறுமி; நெட்டிசன்களை 'வாவ்' சொல்ல வைத்த வீடியோ
வித்தியாசமான பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிறுமி சாமர்சால்ட் செய்யும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜிம்னாஸ்ட் மற்றும் ஃபிட்னஸ் மாடலான சோம்யா சைனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு இளம் சிறுமி பாவாடை அணிந்தபடி தடையின்றி தொடர்ச்சியாக சாமர்சால்ட் செய்வதைக் காணலாம். சோம்யா சைனி, "இந்த வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்ற பதிவுடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த சிறுமி அசால்ட்டாக சாமர்சால்ட் செய்து முடித்துவிட்டு கேமராவை புன்னகையுடன் பார்ப்பதுடன் வீடியோ முடிகிறது. ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோவுக்கு லைக்குகளும், கமெண்ட்ஸ்களும் குவிந்த வண்ணம் உள்ளன.