Loading...
துணிகளுக்குக் கஞ்சி போடுவது என்றால் என்ன?
துணிகளுக்குக் கஞ்சி போடுவதால் கிடைக்கும் நன்மைகள்

துணிகளுக்குக் கஞ்சி போடுவது என்றால் என்ன?

எழுதியவர் Vasuki
Jul 19, 2026
03:29 pm

செய்தி முன்னோட்டம்

நிறைய பேர் புதிய ஆடைகளை வாங்கும்போது, அவற்றின் ஃபிட்டிங் கச்சிதமாக இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். ஆனால், அந்தத் துணிகளை ஒருமுறை துவைத்த பிறகு, அவற்றின் அசல் ஃபிட்டிங் மாறிவிடுவதை நாம் கவனித்திருப்போம். துணிகளின் இழை தளர்ந்து போவதுதான் இதற்கு மிக முக்கிய காரணமாகும். அப்படித் தளர்ந்து போன துணிகளை மீண்டும் அதன் பழைய புதுப் பொலிவான நிலைக்குக் கொண்டுவர கஞ்சி போடும் பாரம்பரிய முறையைப் பயன்படுத்துகிறார்கள். துணிகளுக்குக் கஞ்சி போடுவது என்றால் உண்மையில் என்ன, அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படிச் சரியாகச் செய்ய வேண்டும் என்பது குறித்தான எளிய வழிமுறைகளை இன்று நாம் விரிவாகப் பார்ப்போம்.

முறை

துணைகளுக்குக் கஞ்சி போடும் முறை

துணிகளுக்குக் கஞ்சி போடுவதற்கு முன்பாக, துணிகளை நன்றாகத் துவைத்து உலர வைக்க வேண்டும்.

பிறகு, ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை எடுத்து, அதில் ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் சோள மாவைச் சேர்த்து நன்றாகக் கரைக்க வேண்டும்.

இப்போது, இந்தக் கலவையில் துணியைச் சிறிது நேரம் ஊறவிட வேண்டும். அடுத்து, துணியை எடுத்துச் சாதாரணத் தண்ணீரில் ஒருமுறை அலசிட வேண்டும். இதன்பின், துணியை ஒரு ஹேங்கரில் போட்டு நிழலில் காயவிடலாம்.

ஒரு விஷயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள், கஞ்சி போட்ட துணிகளை ஒருபோதும் நேரடி வெயிலில் காயப்போடக் கூடாது; ஏனெனில் வெயில் பட்டால் துணியின் நிறம் மாறிவிடும்.

நன்மைகள்

துணிகளுக்குக் கஞ்சி போடுவதால் கிடைக்கும் நன்மைகள்

துணிகளுக்குக் கஞ்சி போடும்போது, அவற்றின் ஃபிட்டிங் (Fitting) தளர்ந்து போகாமல் அப்படியே கச்சிதமாக இருக்கும்; இதனால் ஆடைகள் பார்ப்பதற்கும் மிகவும் அழகாகவும், புத்தம் புதியது போலவும் கம்பீரமாகத் தோற்றமளிக்கும்.

இதுமட்டுமல்லாமல், துணிகளின் ஆயுட்காலமும் கணிசமாக அதிகரிக்கும். ஏனெனில், கஞ்சி போடும்போது துணியின் நூலிழைகள் பலப்பட்டு இன்னும் கெட்டியாக மாறுகின்றன.

இந்தத் பாரம்பரிய முறை பருத்தி, லினன் போன்ற மென்மையான இயற்கை இழைக் துணிகளுக்கு ரொம்பவே அற்புதமாக வேலை செய்யும்.

மேலும், கஞ்சி போடுவதால் துணிகள் எளிதில் அழுக்கடைவது இல்லை; அத்துடன் துணியின் அசல் பளபளப்பும் மங்காமல் நீண்ட நாட்களுக்கு அப்படியே நிலைத்திருக்கும்.

ADVERTISEMENT

வரலாறு

துணிகளுக்குக் கஞ்சி போடும் வரலாறு

துணிகளுக்குக் கஞ்சி போடும் பழக்கம் மிகவும் பழமையானது; இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. முதன்முதலில் சீனாவில்தான் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

அங்கு பட்டு மற்றும் பருத்தி துணிகளுக்குக் கஞ்சி போட்டார்கள். அதன் பிறகு, இம்முறை ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் பரவியது.

முன்னர் இவேலைகள் முற்றிலும் கைகளாலேயே செய்யப்பட்டன; ஆனால், இப்போது நவீன மிஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது கடைகளில் துணிகளின் வகைகளுக்கு ஏற்ப, பல வகையான ரெடிமேட் ஸ்டார்ச்சுகள் எளிதாகக் கிடைக்கின்றன.

ADVERTISEMENT

கவனிக்க வேண்டியவை

துணிகளுக்குக் கஞ்சி போடும்போது கவனிக்க வேண்டியவை

துணிகளுக்கு மிக அதிகமாகக் கஞ்சி போடக் கூடாது; அப்படிப் போட்டால் ஆடைகளின் மென்மைத்தன்மை மாறி, அவற்றின் வடிவமே மிகக் கடினமாக மாறிவிடலாம்.

கஞ்சி தயாரிக்க எப்போதும் குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும்; ஏனெனில் வெந்நீரில் ஸ்டார்ச் சரியாகக் கரையாது, துணியிலும் ஒட்டாது.

வெவ்வேறு நிறமுடைய துணிகளை ஒரே பக்கெட்டில் ஒன்றாக ஊறப்போடக் கூடாது; அப்படிச் செய்தால், ஒரு துணியின் நிறம் மற்றொன்றில் கலந்து வீணாக வாய்ப்பு உள்ளது.

நீங்கள் முதன்முறையாகக் கஞ்சி போடுகிறீர்கள் என்றால், ஆரம்பத்தில் கொஞ்சமாக ஸ்டார்ச் சேர்த்துப் பழகுங்கள்; அப்பொழுதுதான் உங்களுக்கே அதற்கான சரியான அளவு எது என்பது தெளிவாகப் புரியும்.

ADVERTISEMENT