Loading...
அதிக சோப் பவுடர் போட்டா துணி நல்லா அழுக்கு போகுமா? வாஷிங் மெஷினில் பலரும் செய்யும் மாபெரும் தவறு
வாஷிங் மெஷினில் அதிக டிடர்ஜென்ட் போடுவது குறித்த கட்டுக்கதைகள்

அதிக சோப் பவுடர் போட்டா துணி நல்லா அழுக்கு போகுமா? வாஷிங் மெஷினில் பலரும் செய்யும் மாபெரும் தவறு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
08:07 pm

செய்தி முன்னோட்டம்

வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைக்கும் போது அதிகளவில் டிடர்ஜென்ட் போட்டால் துணிகள் மிகச் சுத்தமாகும் என்று பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமான சோப் பவுடர் அல்லது லிக்விட் பயன்படுத்துவது துணிகளை சுத்தமாக்குவதற்குப் பதிலாக மேலும் அழுக்காக்கும் என்பதுதான் உண்மையாகும். அதிக டிடர்ஜென்ட் போடும் போது உருவாகும் அதிகப்படியான நுரை, துணிகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற விடாமல் தடுத்துத் துணியின் இடுக்குகளிலேயே தங்கவைத்து விடுகிறது.

பாதிப்புகள்

துணிகள் மற்றும் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்

அளவுக்கு அதிகமான நுரையை வாஷிங் மெஷினின் வழக்கமான வாஷிங் சுழற்சியால் முழுமையாக அலசி வெளியேற்ற முடியாது.

இதனால் துவைக்கப்பட்ட பிறகும் துணிகளின் இழைகளில் சோப் பிசுபிசுப்பு தங்கி, துணிகள் சீக்கிரமே சாயம் வெளுக்கவும் கடினமாக மாறவும் காரணமாகிறது.

மேலும், இந்த சோப் பிசுபிசுப்பு படிந்த துணிகளை அணிவதனால் உணர்திறன் கொண்ட சருமம் உள்ளவர்களுக்குத் தோல் அரிப்பு, ரெட்னஸ் மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சேதம்

வாஷிங் மெஷின் இயந்திரத்திற்கு உண்டாகும் சேதம்

அதிகமாக சோப் பவுடர் பயன்படுத்துவது துணிகளுக்கு மட்டுமின்றி வாஷிங் மெஷின் இயந்திரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மெஷினின் உள்குழாய்கள் மற்றும் டிரம் பகுதியில் படிந்துவிடும் நுரைப் பிசுபிசுப்பு, நாளடைவில் துர்நாற்றத்தையும் பூஞ்சை காளான்களையும் உருவாக்கும்.

இதனால் மெஷினின் மோட்டாருக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, வடிகால் அடைப்பு மற்றும் இயந்திரப் பழுதுகள் உருவாகி மெஷினின் ஆயுட்காலம் பெருமளவு குறைந்துவிடும்.

ADVERTISEMENT

சரியான முறை

சரியான அளவும் துவைக்கும் முறையும்

துணிகளின் எடை மற்றும் அழுக்கின் அளவுக்கு ஏற்ப மட்டுமே டிடர்ஜென்ட்டை அளந்து பயன்படுத்த வேண்டும்.

மெஷினுடன் வழங்கப்படும் அளவு கோப்பையைக் கொண்டு சரியான அளவில் சோப் பவுடர் அல்லது லிக்விட் ஊற்றுவதே சிறந்தது.

இதரக் கறைகளை நீக்க டிடர்ஜென்ட்டை அதிகரிப்பதற்குப் பதிலாக, கறை உள்ள பகுதியில் முன்னதாகவே சிறிது லிக்விட் தடவி ஊறவைத்துத் துவைப்பதே சரியான முறடையாகும்.

ADVERTISEMENT