LOADING...
தினமும் அதிகாலையில் தூக்கம் விழித்து அவதிப்படுகிறீர்களா? 3 AM தூக்கக் கலைப்பிற்கும் பிரேக்பாஸ்ட்டுக்கும் உள்ள அதிர்ச்சித் தொடர்பு! 
அதிகாலை 3 மணிக்குத் தூக்கம் கலைவது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

தினமும் அதிகாலையில் தூக்கம் விழித்து அவதிப்படுகிறீர்களா? 3 AM தூக்கக் கலைப்பிற்கும் பிரேக்பாஸ்ட்டுக்கும் உள்ள அதிர்ச்சித் தொடர்பு! 

எழுதியவர் Sekar Chinnappan
Jan 11, 2026
08:23 pm

செய்தி முன்னோட்டம்

பலர் இரவு சரியாகத் தூங்கினாலும், அதிகாலை 3 மணி அல்லது 4 மணியளவில் திடீரென விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதற்குக் காரணம் உங்கள் காலை உணவில் நீங்கள் எடுக்கும் அதிகப்படியான சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட் இருக்கலாம் என்று ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காலை உணவிற்கும் நள்ளிரவுத் தூக்கத்திற்கும் உள்ள இந்தத் தொடர்பு பலருக்கும் தெரிவதில்லை.

தாக்கம்

காலை உணவின் தாக்கம்

காலையில் நீங்கள் இனிப்புச் சத்து நிறைந்த உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்கிறது. இது நாள் முழுவதும் ஒரு சுழற்சியை (Blood Sugar Rollercoaster) உருவாக்குகிறது. பகலில் சர்க்கரை அளவு ஏறி இறங்குவதால், இரவு நேரத்தில் உடல் சமநிலையை அடையப் போராடுகிறது. நள்ளிரவில் இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறையும்போது, அதைச் சரிசெய்ய உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது, இது உங்களை விழிப்படையச் செய்கிறது.

புரதம்

புரதச் சத்தின் முக்கியத்துவம்

தூக்கமின்மைப் பிரச்சனையைத் தவிர்க்க, காலை உணவில் போதுமான அளவு புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முட்டை, நட்ஸ் அல்லது முழு தானியங்கள் போன்ற உணவுகள் இரத்த சர்க்கரையைச் சீராக வைத்திருக்க உதவும். காலையில் முறையான ஊட்டச்சத்தைப் பெறும்போது, அது இரவு நேர ஹார்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

Advertisement

சிறந்த தூக்கம்

சிறந்த தூக்கத்திற்கான வழிமுறைகள்

தூக்கம் கலைவதைத் தடுக்க, காலை உணவில் சர்க்கரையைக் குறைப்பதுடன், இரவு உணவை உறங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே முடித்துவிட வேண்டும். மேலும், காஃபின் கலந்த பானங்களை மாலையில் தவிர்ப்பது நல்லது. ஒருவரின் உணவுக் பழக்கம் சீராக இருந்தால் மட்டுமே, அவரது தூக்கச் சுழற்சியும் சரியாக இருக்கும். எனவே, இரவுத் தூக்கத்தை மேம்படுத்த முதலில் உங்கள் காலை உணவுத் தட்டில் இருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்.

Advertisement