விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகருக்கு 21 கொழுக்கட்டை படைப்பதன் பின்னணியில் உள்ள ஆன்மீகக் காரணம் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வழிபாட்டின் மிக முக்கியமான பிரசாதமாக கொழுக்கட்டை என்று அழைக்கப்படும் மோதகம் விளங்கி வருகிறது. 'மோதகப்பிரியன்' என்று அழைக்கப்படும் விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை படைப்பது வெறும் சுவையான பலகாரம் மட்டுமல்ல; அதற்குப் பின்னால் ஆழமான ஆன்மீக மற்றும் தத்துவார்த்த கருத்துகள் அடங்கியுள்ளன. விநாயகருக்குப் படைக்கப்படும் 21 மோதகங்கள் என்பது ஐம்பூதங்கள், ஐந்து புலன்கள், ஐந்து கன்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகிய 21 தத்துவங்களையும் இறைவனிடம் முழுமையாகச் சமர்ப்பிப்பதைக் குறிக்கிறது. தடைகளை நீக்கும் விக்னஹர்த்தாவான விநாயகருக்கு மோதகம் படைப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கையாகும்.
வரலாறு
கொழுக்கட்டை படைப்பதற்கு பின்னால் உள்ள புராண வரலாறு
பார்வதியிடம் தேவர்கள் தெய்வீக ஞானம் நிறைந்த சிறப்பு கொழுக்கட்டையின் ஒன்றை வழங்கினர்.
விநாயகருக்கு அன்னை அதை வழங்கினார் என்றும், அது பிள்ளையாருக்கு மிகவும் பிடித்ததுடன், ஞானத்தின் அடையாளமாக அவரை மாற்றியது என்பதும் ஆன்மீக வரலாறு.
அனுசுயா தேவி சிவபெருமானுக்கு விருந்தளித்த போது அவரது பசி தீரவில்லை.
ஆனால், சிறுவனான விநாயகருக்கு ஒரே ஒரு மோதகம் அளித்ததும் சிவபெருமான் 21 முறை ஏப்பம் விட்டு முழுத் திருப்தியடைந்தார். இதனாலேயே 21 மோதகங்கள் படைக்கும் வழக்கம் உருவானது என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
கொழுக்கட்டையின் வெளிப்புற அரிசி மாவுப் பகுதி உலகியல் உடலையும், உள்ளே இருக்கும் இனிப்பான பூரணம் ஆன்மாவின் பேரானந்தத்தையும் குறிக்கிறது.
கொழுக்கட்டையின் கூர்மையான உச்சிப் பகுதி ஆன்மீக விழிப்புணர்வின் உச்சத்தை குறிக்கிறது.