LOADING...
வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக் எடுத்துக் கொள்ளாதீங்க! ஒவ்வொரு வலியும் கூறும் ரகசியம் என்ன?
வயிற்று வலி அறிகுறிகளின் முழு விவரம்

வயிற்று வலியை சாதாரணமாக எடுத்துக் எடுத்துக் கொள்ளாதீங்க! ஒவ்வொரு வலியும் கூறும் ரகசியம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2025
07:09 pm

செய்தி முன்னோட்டம்

பெரும்பாலான மக்கள் அடிவயிற்று வலி என்றால், அதைச் சாதாரண வாயுத் தொல்லை அல்லது அஜீரணம் என்று புறக்கணிக்கின்றனர். ஆனால், வலி எங்கு ஏற்படுகிறது, அதன் தன்மை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து, அது சாதாரண வாயுப் பிடிப்பு முதல் குடல்வால் அழற்சி (Appendicitis) போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் வரை பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வயிற்று வலியைக் கண்டறிய அதன் இருப்பிடம் ஒரு முக்கியமான விஷயம் ஆகும். மேல் வயிறு மற்றும் நடுப்பகுதியில் எரிச்சல் இருந்தால், இது பொதுவாக அமில வீக்கம் (Acid Reflux) அல்லது இரைப்பையழற்சி (Gastritis) காரணமாக ஏற்படுகிறது. இந்த வலி நீடித்தால், அது இரைப்பை புண்ணாக (Gastric Ulcer) இருக்கலாம்.

வலி

வலி ஏற்படும் பகுதி மற்றும் விவரங்கள்

கொழுப்பு நிறைந்த உணவைச் சாப்பிட்ட பிறகு திடீரென வலது விலா எலும்பிற்குக் கீழ் வலி ஏற்பட்டால், அது பித்தப்பை (Gallbladder) கற்கள் அல்லது வீக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சலுடன் கூடிய கடுமையான, நீடித்த வலி ஏற்பட்டால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவது கட்டாயம். கீழ் வயிற்றில் வலது பக்கம் வலி ஏற்பட்டால், அது குடல்வால் அழற்சியின் (Appendicitis) அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சல், குமட்டல் மற்றும் அசைந்தால் வலி அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், இது ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும். நடு வயிற்றில் பிடிப்பு போன்ற வலி ஏற்படுவது பொதுவாக அதிக உணவு, வாயு அல்லது அஜீரணம் போன்ற சாதாரண காரணங்களால் ஏற்படுகிறது. பெரும்பாலும் வாயு வெளியேறினால் வலி குறையும்.

மருத்துவர் 

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

சாதாரண வீட்டு வைத்தியங்கள் மூலம் பெரும்பாலான வலிகள் குணமாகிவிடும் என்றாலும், சில அறிகுறிகள் உடனடியாக மருத்துவ உதவி தேவை என்பதைக் குறிக்கின்றன. அதன்படி, வலி 24 முதல் 48 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், காய்ச்சல், தொடர் வாந்தி அல்லது நீர்ச்சத்து குறைபாடு இருந்தால், மலம் அல்லது வாந்தியில் இரத்தம் அல்லது மலம் கருப்பு நிறத்தில் இருந்தால், விளக்க முடியாத உடல் எடை குறைவு அல்லது கடுமையான, திடீர் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சாதாரண வலிக்கும் தீவிர நோயின் அறிகுறிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது, ஒருவரின் செரிமான ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதிலும் மிக அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement