LOADING...
பாத்ரூமிற்குள் டூத் பிரஷ்ஷை ஓப்பனா வச்சிருக்கீங்களா? டாய்லெட் ப்ளூம் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல் 
டாய்லெட் ப்ளூம் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல்

பாத்ரூமிற்குள் டூத் பிரஷ்ஷை ஓப்பனா வச்சிருக்கீங்களா? டாய்லெட் ப்ளூம் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல் 

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2026
05:41 pm

செய்தி முன்னோட்டம்

நாம் தினமும் காலையில் எழுந்ததும் நமது பற்களை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷை பெரும்பாலானோர் பாத்ரூமிற்குள் இருக்கும் வாஷ் பேசின் அருகிலோ அல்லது ஓப்பனாக இருக்கும் ஹோல்டரிலோதான் வைத்திருக்கிறோம். ஆனால், நாம் அறியாமல் செய்யும் இந்த ஒரு சிறிய விஷயம், நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படும் வகையில் உள்ளது. பாத்ரூமிற்குள் டூத் பிரஷ்ஷை மூடி வைக்காமல் திறந்த நிலையில் வைப்பதால் ஏற்படும் அந்த அருவருப்பான பின்னணி என்ன என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

டாய்லெட் ப்ளூம்

காற்றில் பறக்கும் மலம்: டாய்லெட் ப்ளூம் என்றால் என்ன?

நாம் டாய்லெட்டை பயன்படுத்திவிட்டு அதன் மூடியைத் திறந்தவாறே ஃபிளஷ் செய்யும்போது, அங்கிருந்து ஒரு கண்ணுக்குத் தெரியாத வாயுப் புயல் கிளம்புகிறது. அறிவியல் பூர்வமாக இதற்கு டாய்லெட் ப்ளூம் (Toilet Plume) என்று பெயர். நாம் ஃபிளஷ் செய்யும் அதிர்வில், டாய்லெட் கிண்ணத்தில் இருக்கும் நீர் மற்றும் கழிவுகளிலிருந்து மிக நுண்ணிய நீர்த்துளிகள் காற்றில் விசிறியடிக்கப்படுகின்றன. இந்தத் துகள்கள் பாத்ரூம் காற்றில் சுமார் 6 அடி உயரம் வரை எழும்பி, அங்கு காற்றில் மிதந்து கொண்டிருக்கும் ஆற்றல் வாய்ந்தவை.

டூத் பிரஷ்

டூத் பிரஷ்ஷில் தஞ்சமடையும் ஈ-கோலி கிருமிகள்

இவ்வாறு காற்றில் பரவும் நுண்ணிய டாய்லெட் துகள்கள், நேரடியாக நாம் திறந்து வைத்திருக்கும் டூத் பிரஷ்ஷில் சென்று தஞ்சமடைகின்றன. லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு திடுக்கிடும் ஆய்வின்படி, பாத்ரூமிற்குள் திறந்த நிலையில் வைக்கப்படும் 60 சதவீத டூத் பிரஷ்களில் மனித மலத்தில் காணப்படும் ஆபத்தான ஈ-கோலி மற்றும் சூடோமோனாஸ் போன்ற நச்சு பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நாம் பற்களைத் தூய்மைப்படுத்த நினைக்கும் பிரஷ்ஷில், டாய்லெட் கழிவுகளின் கிருமிகள் படிந்து விடுகின்றன என்பதுதான் அந்த அருவருப்பான கசப்பான உண்மை.

Advertisement

நோய்கள்

இதனால் உடலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் நோய்கள்

கிருமிகள் படிந்த இந்த டூத் பிரஷ்ஷை நாம் வாய்க்குள் வைக்கும் போது, அந்த பாக்டீரியாக்கள் மிக எளிதாக நமது உடலுக்குள் நுழைகின்றன. இதனால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வாந்தி, குடல் தொற்று, ஈறுகளில் வீக்கம் மற்றும் கடுமையான பற்கள் சொத்தை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த உட்புற காற்று மாசுபாடு மற்றும் கிருமித் தொற்று காரணமாகத் தொடர்ச்சியான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

செய்ய வேண்டியவை

டூத் பிரஷ்ஷைப் பாதுகாக்க செய்ய வேண்டிய 4 கோல்டன் ரூல்ஸ்

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க சில எளிய சுகாதார முறைகளைப் பின்பற்ற வேண்டும்: மூடியை மூடி ஃபிளஷ் செய்யவும்: எப்போதும் டாய்லெட்டை ஃபிளஷ் செய்வதற்கு முன்பு அதன் மேல் மூடியை கட்டாயமாக மூட வேண்டும். பிரஷ்ஷை மூடி வைக்கவும்: டூத் பிரஷ்களுக்கு காற்றோட்டமுள்ள பிரத்யேக கேப்களைப் பயன்படுத்த வேண்டும். தள்ளி வைக்கவும்: கழவறை இருக்கும் இடத்திலிருந்து குறைந்தது 6 அடி தூரத்திற்கு அப்பால் பிரஷ்ஷை வைக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒருமுறை மாற்றவும்: டூத் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுவதுடன், குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் செங்குத்தாக வைக்க வேண்டும்.

Advertisement