LOADING...
சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்
சென்னை டூ திருச்சி 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்

சென்னை டூ திருச்சி இனி 3 மணி நேரம் தான்! 20,000 கோடியில் புதிய எக்ஸ்பிரஸ்பேவே திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு தற்போதைய பயண நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில், 300 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிவேக பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. டைம்ஸ் ஃஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இத்திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது. சென்னையிலிருந்து பெங்களூரு இடையே அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ்பேவே சாலைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் அமையவுள்ள இரண்டாவது பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ்பேவே திட்டம் இதுவாகும். சுமார் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இந்த அதிவேக சாலைக்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தை வருவாய்த்துறை, சுற்றுச்சூழல்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து NHAI அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

பயண நேரம்

120 கி.மீ வேகத்தில் 3 மணி நேரப் பயணம்

தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட வரைபடத்தின்படி, இந்த புதிய எக்ஸ்பிரஸ்பேவே சாலையானது சென்னை சிங்கபெருமாள் கோவில் சந்திப்பில் தொடங்கி, தற்போதைய சென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதி வழியாக செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 90 மீட்டர் அகலத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இச்சாலையில் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும் என்பதால், சென்னை - திருச்சி இடையேயான தூரத்தை வெறும் 3 மணி நேரத்தில் கடக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிவேக சாலை corridor மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் நேரடிப் பயன்பெறவுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்திற்கு முதன்மை முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

Advertisement