LOADING...
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் முதல்வர் விஜய்

கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
09:34 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அரசு வேலைக்கான ஆணைகளை வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், முதல்வரின் கரூர் பயண விவரத்தை வெளியிட்டார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு கரூரில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசு வேலை

41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை உறுதி

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக தரப்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு, வேலைவாய்ப்பு வழங்குவதற்கான கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement