காதலர் தினம் : காதலர் தினத்தன்று, உபயோகமாக பரிசளிக்க கூடிய பொருட்களின் பட்டியல் இதோ!
ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, உலகமுழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளிற்க்கு முன்பு, ஒரு வாரம் முழுவதும், காதலர் தின வாரத்தின் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக, ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவை கொண்டாடப்பட்டது. அந்த நாட்களுக்கு ஏற்றாற்போல, காதலர்கள் தங்கள் பிரியமானவர்களிடம், அன்பைக் காட்டும்விதமாக பலவித பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். பூக்கள், கிரீட்டிங் கார்டுகள், சாக்லேட்டுகள், என விதவிதமான பரிசுகளில் காதலை வெளிப்படுத்துவர். நாளை, காதலர் தினத்தன்று, சிந்தனைமிக்க பரிசின் மூலம், உங்கள் துணையிடம் அன்பை எப்படி உணர வைப்பது வித்தியாசமாக உணர வைக்கலாம் என்பதன் பட்டியல் இதோ:
காதலர்கள் பரிசளிக்க சில உபயோகமான பொருட்கள்
உங்கள் துணை காபி பிரியரா? உங்களின் துணை ஒரு காபி பிரியரா? அப்படியென்றால் விதவிதமான காபி வகைகளை கொண்ட ஒரு பெட்டியை பரிசளிக்கவும். அதற்கென பிரத்யேக காபி மக்குகளையும், பரிசளிக்கலாம். உங்கள் துணை புத்தக பிரியரா? உங்கள் துணை பயங்கரமான புத்தக பிரியராக இருந்தார் என்றால், அவர் எந்த வகை புத்தகத்தை விரும்பி படிப்பார் என்று தெரிந்து கொண்டு (திரில்லர், பாண்டஸி, கவிதைகள், புனைக்கதைகள்) போன்றவற்றை தேர்ந்தெடுத்து பரிசளிக்கலாம். உங்கள் துணை நகை பிரியரா? உங்கள் துணைக்கு தங்க நகைகள் பிடிக்குமென்றால், தற்போதைய ட்ரெண்டில், பல அழகிய டிசைன்களுடன் செயின்களும், மோதிரங்களை, பிரெஸ்ட்லெட் மற்றும் வளையல்கள் போன்றவற்றை பரிசளிக்கலாம். இதனுடன் பல வித்தியாசமான டிஜிட்டல் கேட்ஜெட்களையும் பரிசளிக்கலாம்