மன்மோகன் சிங் மரணத்திற்கு காரணமான சுவாச நோய்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 26ஆம் தேதியன்று காலமானார். டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வயது தொடர்பான உடல்நிலை பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி, மன்மோகன் சிங் சுவாச நோயாலும் அவதிப்பட்டு வந்தார். அவரது இறப்புக்கு முக்கிய காரணமாக சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுவாச நோய்களின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை இதில் விரிவாக பார்க்கலாம்.
சுவாசக் கோளாறால் மூச்சு விடுவதில் சிரமம்
மன்மோகன் சிங்குக்கு சுவாசக் கோளாறு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சுவாச நோய் காரணமாக, உங்கள் நுரையீரலின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். சுவாச நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம். காற்று மாசுபாடு, தொற்று மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இந்த நோய்க்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
அதிகரித்து வரும் சுவாச நோய்கள்
அதிகரித்து வரும் சுவாச நோய்களின் எண்ணிக்கை உண்மையில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மோசமான வாழ்க்கை முறை, உணவுத் திட்டம் மற்றும் சுற்றுச்சூழலின் காரணமாக, சுவாச நோய்களின் ஆபத்து அதிக அளவில் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய இரண்டு நோய்களால் ஏராளமான உயிர்கள் இழக்கப்படுகின்றன. இந்த நோய்கள் இளைஞர்களையும் பலிவாங்குகின்றன.
தடுப்பு குறிப்புகள்
சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், புகைபிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். நுரையீரலை சேதப்படுத்தும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க முககவசத்தைப் பயன்படுத்தலாம். இந்த வகை நோயைத் தவிர்க்க, நீங்கள் காற்று சுத்திகரிப்பாளர்களை நிறுவலாம் அல்லது வீட்டில் தாவரங்களை நடலாம். இது தவிர, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள், இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். எனினும், இவை பொதுவான தகவலுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தீவிர உடல்நலப் [பிரச்சினை இருப்பின், உரிய மருத்துவ ஆலோசனையுடனே எதையும் பின்பற்ற வேண்டும்.