LOADING...
21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!
21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு

21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2025
11:18 am

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவில் புரதம் மிகக் குறைவு; 62% கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தே பெறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் இந்திய நீரிழிவு தொடர்பான அமைப்பு (INDIAB) இணைந்து நடத்திய ஒரு நாடு தழுவிய ஆய்வில், நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை அதிகரிப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வு

ஆய்வின் முக்கிய அம்சங்கள்

குறைந்த புரதச்சத்து: இந்தியாவில் ஒட்டுமொத்தமாக புரதம் உட்கொள்ளும் அளவு தினசரி கலோரியில் 12% மட்டுமே. பெரும்பாலான புரதம் தானியங்கள், பருப்பு வகைகளிலிருந்தே பெறப்படுகிறது. பால் மற்றும் இறைச்சிப் பொருட்களின் நுகர்வு மிகவும் குறைவாக உள்ளது. அதிக கார்போஹைட்ரேட்: பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தினசரி கலோரியில் சுமார் 62% கார்போஹைட்ரேட் உணவுகள் மூலமாகப் பெறுகின்றனர். தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் வெள்ளை அரிசியும், வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் கோதுமையும் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. சர்க்கரை மற்றும் கொழுப்பு: 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தேசிய அளவில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 5% அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொழுப்புச் சத்தும் பரிந்துரைக்கப்பட்டதை விட 7% அதிகமாக உள்ளது.

அபாயம்

அபாயம் மற்றும் பரிந்துரை

அதிக கார்போஹைட்ரேட் (வெள்ளை அரிசி, சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்) மற்றும் குறைந்த தரமான புரதம் கொண்ட இந்திய உணவுப் பழக்கமே நீரிழிவு, நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் உடல் பருமன் போன்ற வளர்ச்சிதை மாற்ற அபாயங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் பரிந்துரைப்பின்படி: அதிக கார்போஹைட்ரேட் உணவில் இருந்து தினசரி 5% கலோரிகளை தாவர அல்லது பால் புரதங்களுடன் மாற்றினால், நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் கணிசமாகக் குறையும். வெறும் அரிசியை முழு கோதுமைக்கோ அல்லது சிறுதானியங்களுக்கோ மாற்றுவது மட்டும் பலன் அளிக்காது; புரத உட்கொள்ளலை அதிகரிப்பதே தீர்வுக்கு அவசியம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.