
பட்டர் கார்லிக் சிக்கன் ருசியில் சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம்..ரெசிபி இதோ..!
செய்தி முன்னோட்டம்
புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிட முடியவில்லையே என வருந்தும் நெஞ்சுகளுக்காக, நியூஸ்பைட்ஸ்-இல் தினந்தோறும் அசைவத்திற்கு மாற்றான சைவ ரெசிபிக்கள் உங்கள் இல்லம் தேடி வருகிறது.
இப்போது நிமிடத்தில் செய்யக்கூடிய பலவித உணவுக்குறிப்புகள் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
இன்று, பட்டர் கார்லிக் சிக்கன் ருசியில் செய்யக்கூடிய சுவையான பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
card 2
தேவையான பொருட்கள்:
உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்.
வெங்காயம் - 1 நறுக்கியது
காளான் - 600 கிராம்
பூண்டு - 1/4 கப் பொடியாக நறுக்கியது
உப்பு - 1
1 தேக்கரண்டி தைம்
1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள் நறுக்கப்பட்டது
card 3
செய்முறை:
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து, மெல்லியதாக நறுக்கி தனியாக வைக்கவும்.
ஒரு கடாயில் வெண்ணெய் உருக்கவும். பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு நறுக்கிய காளான் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் குறைந்த அனலில் வதக்கவும்.
மஷ்ரூமில் உள்ள தண்ணீரை விட்டு வெளியேறும் வரை சமைக்கவும்.
மஷ்ரூம் நன்றாக சுருங்கியதும், மிளகுதூள், மூலிகை கலவைகள் சேர்க்கவும்.
1 -2 நிமிடங்கள் மெல்லிய தீயில் வதக்கவும்.
பின்னர், தேவையான உப்பு, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பின் அடுப்பை அணைக்கவும்.
சுவையான பட்டர் கார்லிக் மஷ்ரூம் தயார்!