ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்?
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் இந்தியாவின் ரயில் போக்குவரத்து மூலமாக, லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதற்கு காரணம், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணங்கள் மிக பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் உள்ளது.
ரயில்களில், ஏ.சி, ஜெனரல், ஸ்லீப்பர் என பல வகை கோச்கள் உள்ளன.
ஆனால், ட்ரைனில் எப்போதும், முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் கம்பார்ட்மெண்ட், ரயிலின் முதல் மற்றும் கடைசியில் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.
பொதுவாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை விட, ஜெனரல் கோச்களில் மக்கள் அதிகமாக பயணிப்பர்.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும், ஜெனரல் கோச்சில் பயணிப்பவர்கள், ஏறி இறங்குபவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி ரயிலின் நடுப்பகுதியில், ஜெனரல் கோச்சை இணைத்தால், அதிக எடை ஏற்பட்டு, ரயில் சமநிலையை இழக்கும்.
Railway Department
ரயில் இயக்க விதிகளின்படி ஒவ்வொரு பெட்டியின் இருப்பிடமும் தீர்மானிக்கப்படுகிறது
ஜெனரல் பெட்டிகள் முதல் மற்றும் கடைசியில் இருப்பதால் பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது.
முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் கம்பார்ட்மென்ட்கென ஒரு இருக்கை அமைப்பு உள்ளது. அது மற்ற பெட்டிகளின் அமைப்புகளை விட அதிகளவு இருக்கும்.
இதனால் ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் இலகுவாக இருக்கும் எனவும், வண்டியின் இழுவை சக்தி சரிசமமாக பரவும் எனவும் ரயில்வே துறை கூறுகிறது.
ரயிலின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ, பொதுப் பெட்டிகளைச் சேர்ப்பது பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நன்மையே தருகிறது.
தடம் புரள்வது அல்லது தீ விபத்து போன்ற அவசர காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விரைவாக வெளியேறவும், அதிக உயிர்சேதத்தை தவிர்க்கவும் இந்த முன்னேற்பாடு என கூறப்படுகிறது.