வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவது ஆரோக்கியமானதா? இப்படி சாப்பிடுவதுதான் நல்லது
செய்தி முன்னோட்டம்
பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தி முதல் செரிமானம் வரை பல விஷயங்களுக்கான ஒரு இயற்கை மருந்தாகப் பரவலாகப் பாராட்டப்படுகிறது. தங்கள் உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்கலாம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையில், பலர் காலையில் வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், இந்த நடைமுறை அறிவியல் ரீதியாக முழுமையான ஆதரவைப் பெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூற்றுப்படி, பூண்டின் உண்மையான விளைவுகள், அதன் அளவு, ஒருவரது குடல் உணர்திறன் மற்றும் பூண்டை எடுத்துக் கொள்ளும் வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகின்றன.
விளைவுகள்
வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டின் விளைவுகள்
பூண்டில் உள்ள உயிரியல் செயலில் உள்ள சேர்மங்கள், சில தாதுக்களை உடல் உறிஞ்சுவதை மேம்படுத்தலாம். குறிப்பாக, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் பூண்டுடன் சேர்த்து உட்கொள்ளும் போது சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பூண்டில் அல்லிசின் என்ற கந்தகத்தை அடிப்படையாகக் கொண்ட சேர்மம் உள்ளது. இது கல்லீரல் நச்சு நீக்கும் செயல்முறைகளுக்கு உதவுவதன் மூலம், மறைமுகமாக ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தலாம்.
செரிமானம்
செரிமானப் பிரச்சனைகள் மற்றும் குடல் எரிச்சல்
பூண்டில் ஃப்ருக்டான்கள் எனப்படும் ஒரு வகை கார்போஹைட்ரேட் உள்ளது. இது பலருக்குச் செரிமானம் ஆக கடினமானதாக இருக்கும். எனவே, வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவது செரிமானப் பாதைக்கு எரிச்சலை ஏற்படுத்தி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வீக்கம் மற்றும் வாயுவுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணர்திறன் மிக்க செரிமான மண்டலம் உள்ளவர்களுக்கு, வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு சாப்பிடுவது குடல் புறணிக்கு எரிச்சலை உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அழற்சி
அல்லிசின் நிலைப்புத்தன்மை
பூண்டின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு முக்கியக் காரணம் அல்லிசின் என்ற சேர்மம் தான். இருப்பினும், இதன் நிலைப்புத்தன்மை குறைவு. வெறு வயிற்றில் சாப்பிடும் போது, வயிற்றில் உள்ள அமிலங்களால் இந்த அல்லிசின் கிட்டத்தட்ட அழிக்கப்படலாம். இதனால், பூண்டிலிருந்து மக்கள் எதிர்பார்க்கும் மருத்துவப் பலன்கள் குறைய வாய்ப்புள்ளது.
சிறந்த வழி
பூண்டு உட்கொள்ள சிறந்த வழி
வெறும் வயிற்றில் பச்சையாகப் பூண்டு சாப்பிடுவது அனைவருக்கும் உகந்ததல்ல. நீண்ட கால ஆரோக்கியப் பலன்களைப் பெற விரும்பினால், முதிர்ந்த பூண்டு அல்லது பூண்டு சாறுகள் போன்ற பதப்படுத்தப்பட்ட வடிவங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். செரிமான அசௌகரியம் இல்லாமல் பூண்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, சிறிய அளவில் பச்சைப் பூண்டை, உணவுக்கு இடையில் அல்லது உணவோடு சேர்த்துச் சாப்பிடுவது பொதுவாகச் சிறந்தது. அவரவர் உடல் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைக் கவனித்து, சரியான வடிவம் மற்றும் அளவைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.