ரக்ஷா பந்தன் 2026: ராக்கி பண்டிகையின் பின்னணி வரலாறு மற்றும் முக்கியத்துவம்; முழு தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தையும், பாதுகாப்புப் பிணைப்பையும் கொண்டாடும் ரக்ஷா பந்தன் (ரக்ஷி) பண்டிகை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி (சிராவண) மாதத்தின் பௌர்ணமி திதியில் இந்த விழா பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 27 காலை 9:08 மணிக்குத் தொடங்கும் பௌர்ணமி திதி, ஆகஸ்ட் 28 காலை 9:48 மணி வரை நீடிக்கிறது. ஆகஸ்ட் 28 அதிகாலையிலேயே பத்ரா காலம் முடிவடைவதால், அன்றைய தினம் காலையிலேயே ராக்கி கட்டுவது மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது.
வரலாறு மற்றும் பின்னணி
ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் பின்னணியும் வரலாற்று முக்கியத்துவமும்
'ரக்ஷா' என்றால் பாதுகாப்பு என்றும், 'பந்தன்' என்றால் பிணைப்பு என்றும் பொருள்.
சகோதரரின் மணிக்கட்டில் சகோதரி புனிதமான ராக்கி கயிறைக் கட்டி, அவரின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்கிறார். பதிலுக்கு சகோதரன் தனது சகோதரியைப் பாதுகாப்பதாக உறுதியளித்துப் பரிசுகளை வழங்குவார்.
காலப்போக்கில் இந்த விழா வெறும் சகோதரன்-சகோதரி உறவோடு நின்றுவிடாமல், மனிதர்களிடையே இருக்கும் பரஸ்பர அன்பு, நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு பொதுவான அன்புத் திருவிழாவாக மாறியுள்ளது.
வழிபாட்டு முறைகள்
ராக்கி கயிறு கட்டும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள்
ரக்ஷா பந்தன் நாளில் சகோதரிகள் ஒரு சிறிய பூஜைத் தட்டைத் தயாரிப்பார்கள்.
அதில் ராக்கி கயிறு, குங்குமம், அட்சதை, இனிப்புகள் மற்றும் தீபம் ஆகியவை இடம்பெறும்.
முதலில் சகோதரரின் நெற்றியில் திலகமிட்டு, வலது மணிக்கட்டில் ராக்கியைக் கட்டி ஆரத்தி எடுப்பார்கள்.
பின்னர் இருவரும் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வார்கள். சகோதரன் தனது அன்பின் அடையாளமாக சகோதரிக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்வார்.
இந்த புனிதமான கயிறு சகோதரத்துவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்தியா
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரக்ஷா பந்தன்
இந்த பௌர்ணமி நாள் இந்தியாவெங்கும் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மீனவ சமூகத்தினர் கடலுக்குத் தேங்காய்களைப் படைத்து நராளி பௌர்ணமி எனக் கொண்டாடுகின்றனர்.
ஒடிசாவில் காம்ஹா பௌர்ணமி என்ற பெயரில் பலராமரை வழிபட்டு விவசாயத் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்தியா மட்டுமல்லாது நேபாளத்தில் ஜனாய் பௌர்ணமி என்ற பெயரில் ஆன்மீக சடங்குகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறாக, பல பகுதிகளிலும் இந்த பௌர்ணமி நாள் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக விளங்குகிறது.