Loading...
1,700 வைரங்கள், ₹1.5 கோடி விலை! அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்டின் அபூர்வ பாட்டெக் பிலிப் வாட்ச்
அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்டின் அபூர்வ பாட்டெக் பிலிப் வாட்ச்

1,700 வைரங்கள், ₹1.5 கோடி விலை! அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்டின் அபூர்வ பாட்டெக் பிலிப் வாட்ச்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

அம்பானி குடும்பத்தின் இளைய மருமகளான ராதிகா மெர்ச்சன்ட், தனது தனித்துவமான மற்றும் ஆடம்பரமான ஆடை மற்றும் அணிகலன்கள் தேர்வுக்குப் பெயர் பெற்றவர். மும்பையில் நடைபெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவின் 40வது ஆண்டு நிறைவு விழாவில், எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் ரக மேலாடையுடன் அச்சிடப்பட்ட பாவாடையை அணிந்து வந்திருந்தார். இருப்பினும், அன்றைய விழாவில் அனைவரின் கைகளையும் கடந்து கவனத்தை ஈர்த்தது அவர் கையில் அணிந்திருந்த அபூர்வமான பாட்டெக் பிலிப் கைக்கடிகாரமாகும்.

வைரங்கள்

1,700க்கும் மேற்பட்ட வைரங்கள் மற்றும் மரகதங்கள்

ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த இந்த வாட்ச் 'Patek Philippe Twenty-4 Haute Joaillerie (Ref. 4909-107G)' என்ற பிரத்யேக மாடலாகும்.

18 காரட் ஒயிட் கோல்டால் செய்யப்பட்ட இதன் செவ்வகக் கேஸில் 33.64 காரட் எடையுள்ள 864 பாகுட்-கட் வைரங்களும், 1.62 காரட் எடையுள்ள 855 கூடுதல் வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன.

மேலும், 54 மார்க்யூஸ்-கட் மரகதங்கள் மற்றும் 241 கூடுதல் மரகதங்கள் என மொத்தம் 1,700க்கும் மேற்பட்ட ரத்தினக் கற்கள் இதில் அழகாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கலைப்படைப்பு

ரூ.1.51 கோடி மதிப்பிலான தலைசிறந்த கலைப்படைப்பு

வாட்ச் சேகரிப்பாளர்கள் மற்றும் தி இந்தியன் ஹோரோலஜி தகவல்களின்படி, இந்த அபூர்வக் கடிகாரத்தின் சில்லறை விலை சுமார் $1,60,000 டாலர்கள் ஆகும்.

இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.1.51 கோடி ஆகும்.

சாதாரண கைக்கடிகாரமாக மட்டுமில்லாமல், முழுமையாக வைரம் மற்றும் மரகதக் கற்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஆபரணக் கலைப்படைப்பாக இது திகழ்கிறது.

ADVERTISEMENT

ஆடம்பரத் தோற்றம்

பாரம்பரியமும் நவீனமும் இணைந்த ஆடம்பரத் தோற்றம்

இந்த வாட்ச்சுடன் சேர்த்து, பச்சை நிற மரகதப் பதக்கம் கொண்ட நெக்லஸ், பிரம்மாண்ட வைர மோதிரம் மற்றும் கம்மல்களை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார்.

பாரம்பரியம் மற்றும் நவீன ஆடை வடிவமைப்புகளை இணைத்து அவர் வெளிப்படுத்திய இந்த ஃபியூஷன் தோற்றம் மற்றும் அதன் விலையுயர்ந்த அணிகலன்கள் தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT