LOADING...
அரிசி சாதத்தை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?
அரிசி சாதம்

அரிசி சாதத்தை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
06:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கிய உணவாக சாதமே இருக்கிறது. அரிசியால் செய்யப்படும் இந்த உணவே தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் அடிப்படையான உணவாக இருக்கிறது. இதனால் சில நேரங்களில் மோசமான சில பழக்கவழக்கங்களையும் இதனை வைத்து நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விடுகிறோம். அதில் ஒன்று சாதத்தை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது. ஆனால் அப்படி சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதம் நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் இருக்கும் போது பேசிலஸ் செரியஸ் என்ற ஒரு வகையான பாக்டீரியா வளர வாய்ப்பிருக்கிறது. சாதத்தை மீண்டும் சூடாக்கும் போது இந்த பாக்டீரியா அழியாது. இதனை சாப்பிடும் போது ஃபுட் பாய்சனுக்கு வழிவகுக்கும்.

உணவு

யாருக்கு ஆபத்து?

கர்ப்பினிகள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்தல், வயிறு உப்புசம், சோர்வு, வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முடிந்த வரையில் நீண்ட நேரம் சாதத்தை அறைவெப்பநிலையில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.சாதம் குளிர்ந்ததும் காற்று புகாத புட்டியில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது பாக்டீரியா வளர்வதைத் தடுக்கலாம்.

Advertisement