சீஸ் பிரியர்களுக்கு ஓர் அமேசிங் செய்தி! பாலில்லாமல் வீகன் சீஸ் செய்வது எப்படி? சுவையை கூட்டும் 4 எளிய ட்ரிக்ஸ்
செய்தி முன்னோட்டம்
தற்போது மக்கள் மத்தியில் தாவர அடிப்படையிலான சமையல் (Plant-based cooking) முறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பால் பொருட்கள் சேர்க்கப்படாத வீகன் சீஸ் (Dairy-free alternatives) முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் மற்றும் சோயா போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வீகன் சீஸ், சாதாரண சீஸுக்குச் சிறந்த மாற்றாக விளங்குகிறது. இதனை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால் உணவின் சுவையை மேலும் அதிகரிக்க முடியும்.
குறிப்பு 1
சரியான அடிப்படையைத் தேர்ந்தெடுப்பது
வீகன் சீஸ் செய்யும் போது அதற்கான சரியான அடிப்படைப் பொருளைத் (Base) தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
கிரீமியான பதத்திற்கு முந்திரி அல்லது பாதாம் போன்ற நட்ஸ் வகைகளும், கெட்டியான ஸ்லைஸ் சீஸ் செய்வதற்கு சோயாவும் ஏற்றவை.
அதேபோல தனித்துவமான சுவைக்குக் தேங்காய்ப் பால் (Coconut Cream) பயன்படுகிறது.
பாஸ்தா மற்றும் சாஸ் வகைகளுக்கு நட்ஸ் அடிப்படையிலான சீஸும், சாண்ட்விச்களுக்கு சோயா அடிப்படையிலான சீஸும் சிறப்பான தேர்வாகும்.
குறிப்பு 2
சுவைகளை சமன் செய்ய மூலிகைகளும் மசாலாப் பொருட்களும்
வீகன் சீஸுக்கு சரியான சீஸ் சுவையை வழங்க 'நியூட்ரிஷனல் ஈஸ்ட்' (Nutritional Yeast) பயன்படுகிறது.
இதனுடன் பூண்டுப் பொடி (Garlic Powder) மற்றும் வெங்காயப் பொடி (Onion Powder) சேர்க்கும் போது சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.
மேலும், துளசி (Basil) அல்லது ஓரிகனோ (Oregano) போன்ற மூலிகைகளைச் சேர்ப்பதன் மூலம் உணவிற்கு நறுமணமும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
வெவ்வேறு மசாலாக்களை முயற்சி செய்து உங்களது சுவைக்கேற்ப சீஸை மாற்றியமைக்கலாம்.
குறிப்பு 3
பதம் முக்கியம்: துருவுவதா, உருக்குவதா?
வீகன் சீஸின் பதம் உணவின் சுவையைத் தீர்மானிக்கும்.
பீட்சா அல்லது கேசரோல் போன்ற உணவுகளுக்கு சீஸ் உருக வேண்டுமெனில், டாபியோகா ஸ்டார்ச் (Tapioca Starch) அல்லது அரோரூட் பொடி பயன்படுத்தி செய்யப்பட்ட சீஸைப் பயன்படுத்த வேண்டும்.
இவை அருமையாக உருகும். அதேவேளையில், சாலட் மற்றும் பாஸ்தா மீது துருவுவதற்கு (Grating) நட்ஸ் அடிப்படையிலான கெட்டியான சீஸைப் பயன்படுத்தினால் வடிவம் மாறாமல் இருக்கும்.
குறிப்பு 4
நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க சேமிக்கும் குறிப்புகள்
வீட்டில் செய்த வீகன் சீஸைக் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
மேலும் அதிக நாட்கள் சேமிக்க வேண்டுமெனில், பிளாஸ்டிக் கவரில் நன்றாகச் சுற்றி, பின்னர் அலுமினியம் ஃபாயில் வைத்து மூடி ஃப்ரீசரில் (Freezer) வைக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் 3 மாதங்கள் வரை சீஸின் சுவையும் பதமும் மாறாமல் புதியது போலப் பாதுகாக்க முடியும்.