LOADING...
உடம்பு எப்பவும் டயர்டா இருக்கா? அடிக்கடி வர்ற சளி, காய்ச்சலுக்கு இதுதான் காரணம்; இதோ உங்களுக்கான தீர்வு
எப்போதும் சோர்வாகவும், அடிக்கடி நோய்வாய்ப்படுபவராகவும் இருப்பவர்கள் அலட்சியப்படுத்தக்கூடாத விதிமுறைகள்

உடம்பு எப்பவும் டயர்டா இருக்கா? அடிக்கடி வர்ற சளி, காய்ச்சலுக்கு இதுதான் காரணம்; இதோ உங்களுக்கான தீர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 01, 2026
06:33 pm

செய்தி முன்னோட்டம்

வேலைப்பளு அல்லது தூக்கமின்மை காரணமாக எப்போதாவது சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால், போதுமான ஓய்வு எடுத்த பிறகும் உடல் சோர்வாகவே இருப்பது (Chronic Fatigue) மற்றும் அடிக்கடி சளி, காய்ச்சல் அல்லது தொற்றுகளுக்கு உள்ளாவது உங்கள் உடலில் ஏதோ குறைபாடு இருப்பதைக் காட்டுகிறது. இதை வெறும் வேலைப்பளு என்று ஒதுக்கித் தள்ளுவது பின்னாளில் பெரிய உடல்நலச் சிக்கல்களை உருவாக்கலாம்.

காரணங்கள்

இதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஆராய்ச்சிகளின்படி, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பின்வரும் காரணங்கள் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன: ஊட்டச்சத்துக் குறைபாடு: உடலில் இரும்புச்சத்து, வைட்டமின் B12 அல்லது வைட்டமின் D குறைவாக இருந்தால், கடுமையான சோர்வு ஏற்படும். அடிப்படை நோய்கள்: நீரிழிவு நோய், தைராய்டு கோளாறுகள் அல்லது தன்னுடல் தாக்குநோய்கள் (Autoimmune diseases) உடலின் ஆற்றலை உறிஞ்சிவிடும். மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை: அதிகப்படியான மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சிதைக்கிறது. போஸ்ட்-வைரல் சோர்வு: ஒருமுறை கடுமையான காய்ச்சல் அல்லது வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, உடல் குணமடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் சோர்வு.

அறிகுறிகள்

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

உங்கள் உடல்நிலை மோசமடைவதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள் இதோ: எவ்வளவு தூங்கினாலும் காலையில் எழும்போது சோர்வாக உணர்வது. அடிக்கடி ஏற்படும் தசை வலி மற்றும் தலைவலி. அடிக்கடி வரும் சளி, இருமல் அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள். வேலையில் கவனம் செலுத்த முடியாமை மற்றும் நினைவாற்றல் குறைதல் (Brain Fog).

Advertisement

சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை மீட்பது எப்படி?

உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சில எளிய வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்: சீரான உணவு: கீரைகள், சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு), நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அருந்துதல்: உடலில் நீர்ச்சத்து குறையும்போது சோர்வு இரட்டிப்பாகும். எனவே தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். உடல் உழைப்பு: தினமும் 20 நிமிட நடைப்பயிற்சி அல்லது யோகா செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து உற்சாகத்தைத் தரும். மருத்துவப் பரிசோதனை: சோர்வு 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால், ரத்தப் பரிசோதனை (சிபிசி, விட்டமின் D, B12) செய்துகொள்வது நல்லது.

Advertisement